பட்ஜெட் விலையில் அதிரடி 5ஜி போன்! 6000mAh பேட்டரியுடன் களமிறங்கிய லாவா போல்ட் என்2 5ஜி… ஆரம்ப விலை வெறும் ₹11,999 மட்டுமே!

இந்திய மொபைல் சந்தையில் சாமானிய மக்களுக்கு ஏற்ற பட்ஜெட் விலையில் தரமான ஸ்மார்ட்போன்களை வழங்கி வரும் உள்நாட்டு நிறுவனமான லாவா (Lava), தற்பொழுது தனது புதிய படைப்பான “லாவா போல்ட் என்2 5ஜி” (Lava Bold N2 5G) மாடலை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்துள்ளது. சந்தையில் உள்ள மற்ற பட்ஜெட் போன்களில் நுகர்வோரை பெரிதும் அச்சுறுத்தும் தேவையற்ற விளம்பரங்கள் மற்றும் தேவையில்லாத ப்ளோட்வேர் (Bloatware) ஆப்ஸ்கள் எதையும் இந்த போனில் வழங்காமல், “நோ பிஎஸ்” (No BS – No Bullshit) என்ற தனித்துவமான முழக்கத்துடன் லாவா நிறுவனம் இதனை உருவாக்கியுள்ளது.

இந்த புதிய லாவா போல்ட் என்2 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய சிறப்பம்சங்கள், விலை மற்றும் விற்பனை சலுகைகள் குறித்த முழு விபரங்கள் இதோ.

இந்த லாவா போல்ட் என்2 5ஜி போனில் நுகர்வோருக்கு மிகச் சிறந்த காட்சி அனுபவத்தை வழங்க “17.13 செமீ (6.75 இன்ச்) எச்டி+” பஞ்ச்-ஹோல் திரை கொடுக்கப்பட்டுள்ளது. இது 120Hz அதிவேக ரெஃப்ரெஷ் ரேட் வசதியைக் கொண்டுள்ளதால் மொபைலை இயக்குவது மிகவும் மென்மையாக இருக்கும். இதன் அதிவேக செயல்பாட்டிற்கு உத்திரவாதம் அளிக்கும் வகையில், இதில் “யுனிசாக் டி8200” (Unisoc T8200) ஆக்டா-கோர் அல்ட்ரா ஃபாஸ்ட் பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது.

புகைப்படங்களை எடுக்க இதன் பின்புறத்தில் 13 எம்பி ஏஐ டூயல் கேமராவும் (13MP AI Dual Rear Camera), முன்பக்கத்தில் 5 எம்பி அசைக்க முடியாத செல்பி கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், தண்ணீர் மற்றும் தூசியில் இருந்து போனைப் பாதுகாக்க இதற்கு IP64 தரச்சான்றிதழ் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  பிரீமியம் வசதிகளுடன் லைக்கா கேமரா போன்! ஷாவ்மி 17டி அதிரடி அறிமுகம்... சிறப்பம்சங்கள் இதோ!

லாவா போல்ட் என்2 5ஜி மொபைலின் மிகப்பெரிய பலமே இதன் பிரம்மாண்டமான “6000mAh” பேட்டரி தான். இது டைப்-சி போர்ட் மற்றும் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. இதன் அசல் சந்தை விலை ₹12,999 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், ஜூன் 9 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு அமேசான் (Amazon Specials) தளத்தில் தொடங்கும் முதல் நாள் விற்பனையில், இது வெறும் ₹11,999 என்ற பிரத்யேக சலுகை விலையில் நுகர்வோருக்குக் கிடைக்க உள்ளது.

கூடுதல் நன்மையாக, இந்த போனை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு வீட்டிற்கே வந்து மொபைலை பழுதுநீக்கி தரும் லாவாவின் “ஃப்ரீ சர்வீஸ் அட் ஹோம்” (Free Service @ Home) திட்டமும் இலவசமாக வழங்கப்படுகிறது. பட்ஜெட் விலையில் ஒரு பவர்புல் 5ஜி போனை வாங்க நினைப்பவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாகும்.