World News
ஸ்பான்சர் இல்லாமல் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வேலை தேடலாம்! UAE அதிரடி Jobseeker Visa அறிவிப்பு!
"உள்ளூர் ஸ்பான்சர் யாருமின்றியே ஐக்கிய அரபு எமிரேட்ஸிற்கு வந்து வேலை தேடலாம்" - வெளிநாட்டுப் பணியாளர்களைக் கவரும் வகையில் 60, 90, 120 நாட்கள் செல்லுபடியாகும் புதிய Jobseeker Visa திட்டத்தை UAE அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
உக்ரைன் போரை முடிக்க தயார்! புதின், ஜெலன்ஸ்கி பற்றி டிரம்ப் கூறிய பரபரப்பு தகவல்!
உக்ரைன் போருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் ரஷ்ய அதிபர் புதினுடன் உடன்பாடு எட்ட விரும்புவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். தலைவர்களிடையேயான தனிப்பட்ட வெறுப்பே பேச்சுவார்த்தைக்குத் தாமதம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுமார் ₹95 லட்சம் கோடி நிதியா? வாக்காளர்களை விலை பேசுகிறாரா டிரம்ப்… தூக்கமிழந்த நிபுணர்கள்!
அமெரிக்கப் பிரதிநிதிகள் சபை தேர்தலில் குடியரசுக் கட்சி வெற்றி பெற்றால், தகுதியுள்ள 27 கோடி மக்களுக்கும் தலா 5,000 டாலர் (சுமார் ₹4.2 லட்சம்) பரிசு வழங்கப்படும் என அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். 95 லட்சம் கோடி ரூபாய் செலவிலான இந்த அறிவிப்பு உலகப் பொருளாதார வல்லுநர்களைப் பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.
ராணுவத்திற்கு நிதி திரட்ட உக்ரைன் எடுத்த அதிர்ச்சி முடிவு! ஆபாச உள்ளடக்கத்தை சட்டப்பூர்வமாக்கத் திட்டம்!
ரஷ்யாவிற்கு எதிரான போர் தீவிரமடைந்து வரும் சூழலில், உக்ரைன் ராணுவத்திற்குத் தேவையான நிதி மற்றும் ட்ரோன்களை வாங்குவதற்காக ஆபாச உள்ளடக்கத்தை (Pornography) சட்டப்பூர்வமாக்கி அதன்மூலம் வரி வசூலிக்க உக்ரைன் நாடாளுமன்றத்தில் புதிய மசோதா முன்வைக்கப்பட்டுள்ளது.
9 நாட்கள் மரண போராட்டம்! ‘ஹரே கிருஷ்ணா’ மந்திரம் சொல்லி நேபாள சுரங்கத்தில் உயிர் பிழைத்த வாலிபர்!
நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர வெள்ளத்தில் திரிசூலி நீர்மின் திட்ட சுரங்கப்பாதைக்குள் சிக்கிய இருவர் 9 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இதில் ஒரு தொழிலாளி ‘ஹரே கிருஷ்ணா’ மந்திரம் உச்சரித்தே நம்பிக்கை இழக்காமல் உயிர் பிழைத்ததாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
286 நாட்கள் கடல் பயணம்: தாய்லாந்து பட்டாயாவில் 5,000 அமெரிக்க கடற்படை வீரர்கள்! தீவிர சோதனையில் இறங்கிய காவல் துறை!
மத்திய கிழக்கில் 286 நாட்கள் நீடித்த கடுமையான போர்ப் பணிக்குப் பிறகு, அமெரிக்காவின் 'USS ஆபிரகாம் லிங்கன்' போர்க்கப்பலின் 5,000 மாலுமிகள் ஓய்வுக்காகத் தாய்லாந்தின் பட்டாயா நகரிற்கு வருகை தந்துள்ளனர். இதனிடையே, நகரில் அசம்பாவிதங்களைத் தடுக்கக் காவல் துறை தீவிர சோதனைகளை முடுக்கிவிட்டுள்ளது.
“திடீரென பாய்ந்த வெள்ளப்பெருக்கு!” – நேபாளத்தில் 105 இந்தியர்கள் மாயம்: பேரழிவை ஏற்படுத்திய இயற்கை சீற்றம்!
திபெத் எல்லைக்கு அருகே உள்ள நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் ஏற்பட்ட பயங்கர திடீர் வெள்ளப்பெருக்கில் பாலங்கள் மற்றும் நீர்மின் திட்டங்கள் அடித்துச் செல்லப்பட்டன. இதில் 105 இந்தியர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் மாயமாகியுள்ளனர்.
US-Iran War: “அமெரிக்காவின் எகனாமிக் டி-டே!” ஈரானின் ராணுவ பலம் காலி? உலகை உலுக்கும் போர் உச்சம்!
ஈரானின் ராணுவ கட்டமைப்புகள் 100% அழிக்கப்பட்டுவிட்டது என அமெரிக்கா தெரிவித்துள்ளது. மேலும் ஈரானின் நிதி ஆதாரங்களை முற்றிலும் முடக்கும் நோக்கில் 'எகனாமிக் டி-டே' என்ற பெயரில் புதிய பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.
‘2,300 பேர் பலி!’ அதிவேகமாகப் பரவும் எபோலா வைரஸ்… கங்கோவில் தொடரும் கொடூரம் – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!
"24 மணிநேரத்தில் 101 பேருக்குத் தொற்று, 33 பேர் பலி!" காங்கோவில் மிகக் கொடூரமாகப் பரவி வரும் எபோலா வைரஸால் இதுவரை 2,300க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவல்!
‘இந்தியாவைப் பாருங்க!’ அமெரிக்கத் தேர்தலில் அதிரடி மாற்றம்… இந்தியத் தேர்தல் ஆணையரைக் மேற்கோள் காட்டி டிரம்ப் புகழாரம்!
"64 கோடி வாக்காளர்கள் வாக்களித்த இந்தியத் தேர்தலில் அனைவரும் புகைப்பட அடையாள அட்டை வைத்திருந்தனர்!" இந்திய தேர்தல் முறையைப் பாராட்டி அமெரிக்காவில் புதிய சட்டத்திற்கு டிரம்ப் அழுத்தம்!









