‘இந்தியாவைப் பாருங்க!’ அமெரிக்கத் தேர்தலில் அதிரடி மாற்றம்… இந்தியத் தேர்தல் ஆணையரைக் மேற்கோள் காட்டி டிரம்ப் புகழாரம்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியத் தேர்தல் நடைமுறையை மிகவும் வியந்து பாராட்டியிருப்பது சர்வதேச அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

சமீபத்தில் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அமெரிக்க நிர்வாகத்திடம் உரையாடும் போது, “முறையான புகைப்பட அடையாள அட்டை எதுவுமே இல்லாமல் அமெரிக்காவில் எப்படித் தேர்தல்களை நடத்துகிறீர்கள்?” என்ற முக்கியக் கேள்வியை முன்வைத்தார். இந்தியாவில் வாக்களிக்கும் ஒவ்வொரு குடிமகனும் தங்களின் புகைப்படத்துடன் கூடிய அதிகாரப்பூர்வ அடையாள ஆவணத்தை வைத்திருப்பது முழுமையாகக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 64 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் பங்கேற்ற இந்தியப் பொதுத்தேர்தலில் கூட, மிகக் குறைந்த அளவிலான அஞ்சல் வாக்குகளுடன், அனைவருக்கும் புகைப்பட அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டு மிகத் துல்லியமாகத் தேர்தல் நடத்தப்பட்டதை டிரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த இந்தியத் தேர்தல் முறையை முதன்மை உதாரணமாகக் கொண்டு, அமெரிக்காவிலும் வாக்காளர்களுக்குக் கட்டாயப் புகைப்பட அடையாள அட்டையை அமல்படுத்த வேண்டும் என்று டிரம்ப் தீவிரமாக வலியுறுத்தி வருகிறார். இதற்காகக் கொண்டுவரப்பட உள்ள ‘சேவ் அமெரிக்கா ஆக்ட்’ (SAVE AMERICA ACT) என்ற புதிய சட்டத்தை அமெரிக்கக் காங்கிரஸ் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்தச் சட்டத்தின் முதன்மை நோக்கம், அமெரிக்கத் தேர்தல்களில் வாக்களிக்கப் பதிவு செய்யும் ஒவ்வொரு நபரும் தங்களின் குடியுரிமைக்கான முறையான சான்றுகளைச் சமர்ப்பிப்பதை உறுதி செய்வதாகும்.

மேலும், அமெரிக்கக் குடியுரிமை பெறாதவர்கள் தவறான முறையில் வாக்காளர் பட்டியலில் இணைவதைத் தடுத்து, அவர்களைப் பட்டியலிலிருந்து நீக்கவும் இந்த புதிய சட்டம் வழிவகை செய்யும். அஞ்சல் வழி வாக்களிக்கும் முறையில் உள்ள முறைகேடுகளைத் தடுத்து, உண்மையான அமெரிக்கக் குடிமக்கள் மட்டுமே நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதை உறுதி செய்ய, இந்தியாவைப் போன்ற கடுமையான வாக்காளர் அடையாளச் சரிபார்ப்பு முறை அமெரிக்காவிற்கும் மிக அவசியமானது என்று டிரம்ப் தனது கருத்தைப் பதிவிட்டுள்ளார்.