பொதுவாக மனிதர்களுக்கு உடல்நலம் சரியில்லாத போது காலை ஒரு மாத்திரை, மாலை ஒரு மாத்திரை என மருத்துவர்கள் பரிந்துரைப்பதை நாம் பார்த்திருப்போம். ஆனால், தற்போதைய இயந்திரத்தனமான ஓட்டப்பந்தய வாழ்க்கையில் கணவன்-மனைவி என்ற உன்னதமான பந்தத்தில் ஏற்படும் விரிசல்கள், மனக்கசப்புகள் மற்றும் ஈகோ பிரச்சினைகளைத் தீர்க்க ஒரு பைசா கூட செலவில்லாத, அதே சமயம் மிகச் சக்தி வாய்ந்த ஒரு மாத்திரை இருப்பதாக ரிலேஷன்ஷிப் நிபுணர்கள் கூறுகிறார்கள்.
தினமும் காலையில் 6 நொடிகள், மாலையில் 6 நொடிகள் என இதற்காக ஒதுக்கினால் போதும், உங்கள் திருமண வாழ்க்கை என்றும் வற்றாத காதலுடன் புதுப்பொலிவு பெறும் என உளவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. நிபுணர்கள் கூறும் அந்த பவர்ஃபுல் மாத்திரையின் பெயர் தான் ‘சிக்ஸ் செகண்ட்ஸ் கிஸ்’ (6-Second Kiss) எனப்படும் 6 வினாடி முத்த விதியாகும்.
இன்றைய அவசர உலகில், வேலைக்குச் செல்லும் தம்பதியர் பலரும் காலையில் வீட்டை விட்டு அவசரமாகக் கிளம்பும் போது தங்களது துணைக்கு ஏனோ தானோ என்று கடமைக்கு ஒரு ‘பை’ (Bye) சொல்லிவிட்டு அல்லது ஒரு நொடியில் இயந்திரத்தனமாக முத்தமிட்டுவிட்டுக் கிளம்புவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்த தீவிரமான பணிச்சுமை மற்றும் நேரமின்மை காரணமாகப் பல தம்பதிகளுக்கு இடையே தற்பொழுது பேசுவதற்கு கூட நேரமில்லாமல் ஒரு வெற்று இடைவெளி அல்லது ஒரு விதமான சலிப்புத் தன்மை உருவாகத் தொடங்குகிறது.
இதனை உடைக்கத்தான் நிபுணர்கள் இந்த 6 வினாடி சூத்திரத்தை முன்வைக்கின்றனர். காலையில் அலுவலகம் கிளம்பும் முன்பாக, அவசரப்படாமல் தங்களது துணையை அருகில் அழைத்து, அவர்களது கண்களை நேராகப் பார்த்து, மனதில் உள்ள மற்ற வேலைகளைப் பற்றி யோசிக்காமல் முழு கவனத்துடன் 6 நொடிகள் தங்களது அன்பை முத்தமாகப் பரிமாறிக் கொள்ள வேண்டும். அதேபோல், மாலையில் வேலை முடிந்து களைப்புடனும், அலுப்புடனும் வீடு திரும்பியதும் உடனே சோஃபாவில் போய் அமர்ந்து கொள்ளாமல், துணையை இன்முகத்தோடு வரவேற்று மீண்டும் ஒரு 6 நொடிகள் அன்பைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
இந்த 6 நொடிகள் என்பதில் ஒரு முக்கிய அறிவியல் ரகசியமும் அடங்கியுள்ளது. நாம் நமது துணையுடன் 6 வினாடிகள் தொடர்ந்து நெருக்கத்தை வெளிப்படுத்தும் போது, நமது மூளையில் ஆக்சிடோசின் (Oxytocin) எனப்படும் ‘காதல் ஹார்மோன்’ சுரப்பு அதிகரிக்கிறது. இது தம்பதியருக்குள் இருக்கும் தேவையற்ற பயம், அன்றாட மன அழுத்தம் ஆகியவற்றை முற்றிலும் குறைத்து, ஒரு இன்ஸ்டன்ட் எனர்ஜி ட்ரிங்க் (Instant Energy Drink) குடித்தது போன்ற புத்துணர்ச்சியையும், பாதுகாப்பான உணர்வையும் தம்பதியர் இருவருக்குள்ளும் ஒருசேர உருவாக்குகிறது.
தங்களது பிஸியான வாழ்க்கையிலும் நமக்காகத் தனது துணை நேரத்தை ஒதுக்குகிறார் என்ற எண்ணமே, திருமண பந்தத்தில் விவாகரத்து வரை செல்லும் பெரிய விரிசல்களைத் தடுத்து அன்யோன்யத்தை பலமடங்கு அதிகரிக்கும் என நிபுணர்கள் உறுதியாகக் கூறுகிறார்கள். உங்கள் துணையுடன் இருக்கும் பந்தத்தில் ஏதேனும் ஒரு சலிப்புத் தன்மை தோன்றுவதாக நீங்கள் உணர்ந்தால், இன்றிலிருந்தே இந்த எளிய 6 செகண்ட்ஸ் மேஜிக்கைத் தொடங்கிப் பாருங்கள்!





