ஆப்பிள் வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சி! மேக்புக், ஐபேட் விலைகளை அதிரடியாக உயர்த்திய Apple!: உலகளாவிய ரேம் சிப் தட்டுப்பாடு தான் காரணமா? இந்தியாவில் புதிய விலை விபரங்கள் வெளியீடு! முழு விபரம் உள்ளே!

இந்தியாவில் ஆப்பிள் (Apple) நிறுவனத்தின் தயாரிப்புகளான மேக்புக் (Mac), ஐபேட் (iPad) மற்றும் அதன் பிற சாதனங்களின் விலைகள் கணிசமாக உயர்த்தப்பட்டு வாடிக்கையாளர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செயற்கை நுண்ணறிவு (AI) தரவு மையங்களின் அசுர வளர்ச்சி காரணமாக, உலகளவில் ஏற்பட்டுள்ள ரேம் (RAM) மற்றும் மெமரி சிப்புகளின் கடுமையான தட்டுப்பாடு மற்றும் வரலாறு காணாத விலை ஏற்றமே இந்த திடீர் விலையுயர்வுக்கு முதன்மைக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சர்வதேச சிப் தட்டுப்பாட்டால் நிறுவனத்திற்கு ஏற்படும் கூடுதல் உற்பத்திச் செலவு மற்றும் நஷ்டத்தைச் சமம் (Expenses and Loss to equalize) செய்யவே ஆப்பிள் நிறுவனம் இத்தகைய கடினமான முடிவை எடுத்துள்ளது.

உதாரணமாக, இந்தியாவில் அடிப்படை 14-இன்ச் மேக்புக் ப்ரோ (MacBook Pro) மாடலின் விலை 70,000 ரூபாய் வரை உயர்ந்து, தற்பொழுது 2,39,900 ரூபாயாக மாறியுள்ளது. அதேபோல் மேக்புக் (MacBook) ஏர் மற்றும் ஐபேட் ப்ரோ, ஐபேட் ஏர் உள்ளிட்ட பல்வேறு சாதனங்களின் விலைகளும் பல ஆயிரங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதுவரை வாடிக்கையாளர்களைப் பாதிப்பில் இருந்து பாதுகாத்த போதிலும், தற்போதைய சூழலில் விலை உயர்வு தவிர்க்க முடியாததாகிவிட்டது என்று ஆப்பிள் நிர்வாகம் விளக்கியுள்ளது.