அமெரிக்காவின் கெடுவை நிராகரித்த ஈரான்: 7 நிபந்தனைகள் பூர்த்தியான பிறகே பேச்சுவார்த்தை!

அமெரிக்காவுடன் எப்போது, எப்படிப் பேச்சுவார்த்தை நடத்துவது என்பது குறித்து தங்களால் நிர்ணயிக்கப்பட்ட ஏழு நிபந்தனைகள் முழுமையாக நிறைவேற்றப்பட்ட பின்னரே முடிவு செய்யப்படும் என்று ஈரானின் பசீஜ் அமைப்பின் தலைவர் ஹொசின் தைப் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். டெஹ்ரானில் நடைபெற்ற இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் விண்வெளிப் பிரிவு வீரர்களின் நினைவஞ்சதிக் கூட்டத்தில் பேசிய அவர், அமெரிக்கா தரப்பில் முன்வைக்கப்படும் காலக்கெடுவுகள் தங்களுக்கு எத்தகைய தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று குறிப்பிட்டார்.

நிபந்தனைகளும் அமெரிக்க கெடுவும்

அமெரிக்கா முதலில் 7 நாள் கெடு விதித்துவிட்டு பின்னர் அதனை 2 நாட்களாகக் குறைத்ததாகவும், ஆனால் ஈரானின் நிபந்தனைகள் நிறைவேறாமல் தாங்கள் எத்தகைய சமரசத்திற்கும் இடமளிக்கப்போவதில்லை என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறினார். ஹோர்முஸ் நீரிணை மற்றும் ராணுவ விவகாரங்களில் தங்களது தற்காப்புத் திறன்கள் எதிர்தரப்பின் கணக்கீடுகளை மாற்றி அமைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஜே.டி. வான்ஸ் ராஜதந்திர முயற்சி

இந்தச் சூழலில், மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் ராஜதந்திர முயற்சிகளின் ஒரு பகுதியாக, அமெரிக்க துணைத் தலைவர் ஜே.டி. வான்ஸ் ஈரானிய உயர் பாதுகாப்பு அதிகாரியுடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து தீவிரமாகப் பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த கால இடைக்காலத் தேர்தல் தோல்திக்கு இந்தப் போர் ஒரு முக்கிய அரசியல் காரணமாக அமைந்ததாக வான்ஸ் கருதுவதால், அவர் இந்தத் ராஜதந்திர நகர்வில் ஆர்வம் காட்டி வருகிறார்.

வெள்ளை மாளிகையில் உட்கட்சி மோதல்

எனினும், வெளியுறவுத்துறை செயலாளர் மார்க்கோ ரூபியோ மற்றும் போர்த்துறை செயலாளர் பீட் ஹெக்செத் போன்ற மூத்த அதிகாரிகள் தொடர் கடற்படை முற்றுகை மற்றும் கடுமையான ராணுவ நடவடிக்கைகளையே தீவிரமாக ஆதரித்து வருகின்றனர். இதன் காரணமாக, டிரம்ப் நிர்வாகத்திற்குள் ஈரானிய விவகாரத்தில் கடுமையான கருத்து வேறுபாடுகளும் உட்பூசல்களும் நிலவி வருவது சர்வதேச அரசியல் அரங்கில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.