Today GoldRate: “தங்கப் பிரியர்களுக்கு குட் நியூஸ்!” – அதிரடியாக குறைந்த தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

தமிழகத் தலைநகர் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வந்த நிலையில், இன்று (ஆகஸ்ட் 27, 2026) தங்கம் வாங்கத் திட்டமிட்டுள்ள மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் அதிரடி விலை வீழ்ச்சியைக் கண்டுள்ளது. நேற்றைய வர்த்தக நிலவரத்துடன் ஒப்பிடுகையில், ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ₹70 வரை குறைந்து வர்த்தகமாகி வருகிறது.

இன்றைய நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ₹14,940 என்ற விலையிலும், ஒரு சவரன் (8 கிராம்) ₹1,19,520 என்ற விலையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்று ஆகஸ்ட் 26 அன்று ஒரு சவரன் தங்கம் ₹1,20,080-க்கு விற்பனையான நிலையில், இன்று ஒரே நாளில் சவரனுக்கு ₹560 வரை விலை குறைந்துள்ளது நகைப் பிரியர்கள் மற்றும் திருமணக் சுபமுகூர்த்த தேவைகளுக்காகத் தங்கம் வாங்குவோருக்குப் பெரும் ஆறுதலைத் தந்துள்ளது.

மறுபுறம், வெள்ளி சந்தையில் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி நேற்றைய நிலையே இன்றும் நீடித்து வருகிறது. சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி ₹265.00-க்கு விற்பனையாகிறது. இதன்படி, ஒரு கிலோ வெள்ளி ₹2,65,000.00 என்ற விலையில் எவ்வித மாற்றமுமின்றி நிலையாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சர்வதேசச் சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள், டாலரின் மதிப்பு மற்றும் முதலீட்டாளர்களின் தேவையைப் பொறுத்து தங்கம் மற்றும் வெள்ளி விலையில் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. வரவிருக்கும் பண்டிகைக் காலங்களை முன்னிட்டு தங்கத்தின் விலையில் ஏற்படும் இந்த சரிவு, சில்லறை விற்பனைச் சந்தையில் ஆபரணங்களுக்கான தேவையை அதிகரிக்கும் என வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர்.