சென்னை கிண்டி மக்கள் மாளிகையில் இன்று காலை நடைபெற்ற பிரம்மாண்ட பதவியேற்பு விழாவைத் தொடர்ந்து, புதிய அமைச்சர்களுக்கான அதிகாரப்பூர்வ இலாக்காக்கள் (துறை ஒதுக்கீடு) குறித்த மிக முக்கிய அரசாணை தற்பொழுது முழுமையாக வெளியிடப்பட்டுள்ளது. முந்தைய தற்காலிகப் பட்டியலில் விடுபட்டிருந்த கூட்டணி கட்சியான இந்திய தேசிய காங்கிரஸின் முக்கிய முகங்களுக்கான துறை ஒதுக்கீட்டு விவரங்கள் தற்பொழுது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளன.
முதலமைச்சர் விஜய் தனது புதிய அமைச்சரவைக் குழுவினருக்குத் தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் துறைகளை மிகவும் சாதுரியமாகப் பிரித்து வழங்கியுள்ளார்.
தலைநகர் சென்னையைச் சேர்ந்த முக்கிய முகங்களுக்குப் பவர்புல் இலாக்காக்கள் தற்பொழுது பிரித்து வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் என். மாரிய வில்சனுக்கு மிகவாவது உயரிய பொறுப்பான நிதித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
அதேபோல், வேளச்சேரி தொகுதி உறுப்பினர் ஆர். குமாருக்கு எதிர்கால நவீன தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய AI (செயற்கை நுண்ணறிவு) மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை வழங்கப்பட்டுள்ளது. ராசிபுரம் உறுப்பினர் டி. லோகேஷ் தமிழ்செல்வனுக்கு வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறையும், விஜய் தமிழன் பார்த்திபனுக்குப் போக்குவரத்துத் துறையும் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்த புதிய அமைச்சரவை விரிவாக்கத்தில், கூட்டணிக் கட்சியான காங்கிரஸைச் சேர்ந்த இரண்டு முக்கிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கேபினட் அமைச்சர் அந்தஸ்துடன் மிக முக்கிய இலாக்காக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அதன்படி, மேலூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ பி. விஸ்வநாதன் அவர்களுக்குத் தமிழகத்தின் மிக முக்கிய துறையான உயர்கல்வித் துறை அதிகாரப்பூர்வமாக ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல், கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ வழக்கறிஞர் எஸ். ராஜேஷ்குமார் அவர்களுக்குத் தமிழகத்தின் பாரம்பரியம் மற்றும் கலைகளை மேம்படுத்தும் சுற்றுலாத் துறை வழங்கப்பட்டுள்ளது.
-
ஸ்ரீநாத் (தூத்துக்குடி) — மீன்வளத் துறை
-
எஸ். கமலி (அவினாசி) — கால்நடைத் துறை
-
சி. விஜயலட்சுமி (குமாரபாளையம்) — பால்வளத் துறை
-
ஆர்.வி. ரஞ்சித்குமார் (காஞ்சிபுரம்) — வனத் துறை
-
வினோத் (கும்போகோணம்) — வேளாண் துறை
-
ராஜீவ் (திருவாடானை) — சுற்றுச்சுழல் துறை
-
B. ராஜ்குமார் (கடலூர்) — வீட்டுவசதித் துறை
-
V. காந்திராஜ் (அரக்கோணம்) — கூட்டுறவுத் துறை
-
பி. மதன் ராஜா (ஓட்டப்பிடாரம்) — சிறுகுறு நடுத்தர தொழில் துறை
-
கே. ஜெகதீஸ்வரி (ராஜபாளையம்) — சமூகநலன் மற்றும் மகளிர் நலத் துறை
-
எஸ். ராஜேஷ்குமார் [காங்கிரஸ்] (கிள்ளியூர்) — சுற்றுலாத் துறை
-
எம். விஜய் பாலாஜி (ஈரோடு கிழக்கு) — கைத்தறி மற்றும் ஜவுளித் துறை
-
டி. லோகேஷ் தமிழ்செல்வன் (ராசிபுரம்) — வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை
-
விஜய் தமிழன் பார்த்திபன் (சேலம் தெற்கு) — போக்குவரத்துத் துறை
-
ரமேஷ் (ஸ்ரீரங்கம்) — இந்து சமய அறநிலையத்துறை
-
P. விஸ்வநாதன் [காங்கிரஸ்] (மேலூர்) — உயர்கல்வித் துறை
-
ஆர். குமார் (வேளச்சேரி) — AI மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை
-
கே. தென்னரசு (ஸ்ரீபெரும்புதூர்) — வெளிநாடுவாழ் தமிழர் நலன் துறை
-
வி. சம்பத் குமார் (கோவை வடக்கு) — பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை
-
ஜெ. முகமது ஃபர்வாஸ் (அறந்தாங்கி) — தொழிலாளர் நலத் துறை
-
என். மாரிய வில்சன் (ஆர்.கே.நகர்) — நிதித் துறை
-
கே. விக்னேஷ் (கிணத்துக்கடவு) — மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை
-
சரத்குமார் (தாம்பரம்) — மனிதவளத் துறை
புதிய அமைச்சர்கள் அனைவரும் இன்று மாலைக்குள் தங்களது துறைகளின் பொறுப்புகளை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு கோட்டையில் தங்களது பணிகளைத் தொடங்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.





