குடும்பப் பணத்தைச் செலவழிக்காதீங்க! – ஆடியோ லான்ச் சர்ச்சைக்கு நடுவே தனுஷ் கொடுத்த நறுக் அறிவுரை!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படத்தின் பிரமாண்ட இசை வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. இந்த விழாவைக் காணத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு வந்தனர். இருப்பினும், விழா அரங்கில் ஏற்பட்ட கடுமையான கூட்ட நெரிசல் மற்றும் கதவுகள் அடைக்கப்பட்டதன் காரணமாக, கைகளில் முறைப்படியான நுழைவுச்சீட்டு (Passes) வைத்திருந்த பல ஆயிரக்கணக்கான ரசிகர்கள் உள்ளே செல்ல முடியாமல் வெளியேற்றப்பட்டனர்.

“யார் தவறு என்றும் ஆராய விரும்பவில்லை”

நிகழ்ச்சி மேலாண்மையில் ஏற்பட்ட இந்த பெரும் குளறுபடியால் ஏமாற்றமடைந்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்கள் வேதனைகளைப் பகிர்ந்து வந்த நிலையில், நடிகர் தனுஷ் இதுகுறித்து மிக உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கைகளில் நுழைவுச்சீட்டு வைத்திருந்தும் உள்ளே வரமுடியாமல் திரும்பச் சென்றது என் மனதிற்கு மிகவும் வேதனை அளிக்கிறது. இது யாருடைய தவறு? என்று நான் ஆராய விரும்பவில்லை. நானே இதற்குப் பொறுப்பேற்று என் வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இனி இப்படி நடக்காமல் பார்த்துக்கொள்வது என் பொறுப்பு” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ரசிகர்களுக்கு தனுஷ் கொடுத்த நறுக் அறிவுரை

மேலும், ரசிகர்கள் நற்பணி மன்றங்கள் மூலம் பல்வேறு உதவிகளைச் செய்து வருவது குறித்துப் பேசிய தனுஷ், தனது ரசிகர்களுக்கு முக்கியமான அறிவுரை ஒன்றையும் வழங்கியுள்ளார். “என்னுடைய பெயரில் பல்வேறு நற்பணிகளைச் செய்து வருகிறீர்கள். அதற்கு நான் எனது சொந்தப் பணத்தைக் கூடச் செலவிடுவதில்லை. இந்தச் சூழ்நிலையில், நான் ஒன்றை மட்டும் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். குடும்பத்தின் தேவைகளுக்குப் போக, உங்களிடம் கூடுதலாகப் பணம் இருந்தால் மட்டுமே இது போன்ற நற்பணிகளைச் செய்யுங்கள். உங்களது குடும்பம் எந்த வகையிலும் பாதிக்கப்படக் கூடாது” என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

திரையுலகில் குவியும் பாராட்டு

விழா ஏற்பாட்டாளர்களின் தவறுகளைக் சுட்டிக்காட்டிக் கடந்து செல்லாமல், ஆயிரக்கணக்கான ரசிகர்களின் ஏமாற்றத்திற்குத் தானே முன்னின்று பொறுப்பேற்ற தனுஷின் இந்தச் செயல் தமிழ் திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் நெகிழ்ச்சியையும் பாராட்டையும் பெற்று வருகிறது.