Gold, Silver Rate Today: உயர்வடைந்த தங்கம் விலை! சவரன் ரூ.1,08,560-க்கு விற்பனை! வெள்ளி விலையில் மாற்றம் இருக்கா?

சர்வதேச வர்த்தகச் சந்தை மாற்றங்கள் மற்றும் பண்டிகைக் காலத் தேவைகளின் காரணமாகத் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் தினசரி மாற்றங்கள் பதிவாகி வருகின்றன. அந்த வகையில், அக்டோபர் 19 நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை சற்று உயர்ந்துள்ளது.

அக்டோபர் 18-ஆம் தேதியுடன் ஒப்பிடுகையில், 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.35 உயர்ந்து, ரூ.13,570-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் ஒரு சவரன் (8 கிராம்) தங்கம் ரூ.280 உயர்ந்து, ரூ.1,08,560 என்ற விலையை எட்டியுள்ளது.

அதேவேளையில், வெள்ளி விலையில் எவ்வித மாற்றமுமின்றித் தொடர்ந்து ஒரே சீரான நிலையில் நீடிக்கிறது. அக்டோபர் 15-ஆம் தேதியிலிருந்து பெரிய அளவிலான மாற்றங்களின்றி இயங்கி வரும் வெள்ளி, ஒரு கிராம் ரூ.240.00 என்ற அளவிலும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.2,40,000.00 என்ற அளவிலும் வர்த்தகமாகி வருகிறது. பண்டிகைக் காலம் நெருங்கி வரும் சூழலில் தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருப்பது நகைப் பிரியர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.