உலகம் முழுவதும் உள்ள கேமிங் பிரியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ 6 (GTA 6) விளையாட்டின் டிஜிட்டல் ப்ரீ-லோடு வரும் நவம்பர் 10-ஆம் தேதி தொடங்கவுள்ளது. பிளேஸ்டேஷன் 5 மற்றும் எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எக்ஸ் கன்சோல் பயனாளர்கள் அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் தேதிக்கு முன்பே கேமைப் பதிவிறக்கம் செய்ய ராக்ஸ்டார் கேம்ஸ் வழிவகுத்துள்ளது.
இந்தியாவில் உள்ள பிளேஸ்டேஷன் 5 பயனாளர்கள் நவம்பர் 10-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் இந்த முன்கூட்டிய பதிவிறக்கத்தைத் தொடங்கலாம். எக்ஸ்பாக்ஸ் கன்சோல் பயனாளர்களுக்கு நவம்பர் 10-ஆம் தேதி காலை 5:30 மணி (IST) முதல் உலகளாவிய முறையில் ப்ரீ-லோடு வசதி செயல்படுத்தப்படும்.
இந்த முன்கூட்டிய பதிவிறக்கத்திற்குப் பயனாளர்களின் கன்சோலில் குறைந்தது 212 ஜிபி காலியிட சேமிப்புத் தேவைப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வெளியீட்டு நாளன்று ஏற்படும் சர்வர் நெரிசலைக் தவிர்க்கும் பொருட்டு இந்த முன்கூட்டிய டவுன்லோடு வசதி வழங்கப்பட்டாலும், முறையான கேம் இயக்கம் நவம்பர் 19-ஆம் தேதிக்குப் பிறகே அனுமதிக்கப்படும்.
புளோரிடா மாநிலத்தை மையமாகக் கொண்ட லியோனிடா (Leonida) பிராந்தியத்தில் அமைந்துள்ள வைஸ் சிட்டியைப் பின்னணியாகக் கொண்டு இந்த விளையாட்டு உருவாகியுள்ளது. ஜேசன் துவால் மற்றும் லூசியா கமிமோஸ் ஆகிய இரு முக்கியக் கதாப்பாத்திரங்களைக் கொண்டு இதன் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஜிடிஏ 6 விளையாட்டின் ஸ்டாண்டர்ட் எடிஷன் ரூ. 5,999 விலையிலும், அல்டிமேட் எடிஷன் ரூ. 7,499 விலையிலும் முன்பதிவு செய்யக் கிடைக்கின்றன. பிளேஸ்டேஷன் மற்றும் எக்ஸ்பாக்ஸ் ஸ்டோர்கள் வாயிலாக கேமர்ஸ் தங்களுக்கான பதிப்புகளை முன்பதிவு செய்து முன்கூட்டியே டவுன்லோடு செய்து கொள்ள முடியும்.