சொந்தமாகப் புதிய கார் வாங்கத் திட்டமிட்டிருக்கும் இந்திய ஆட்டோமொபைல் வாடிக்கையாளர்களுக்கு ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் (JSW MG Motor) நிறுவனம் ஒரு பிரம்மாண்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த ஜூன் மாதத்தில், தனது பெரும்பாலான எலக்ட்ரிக் மற்றும் பெட்ரோல், டீசல் கார் மாடல்களுக்கு ரொக்கத் தள்ளுபடி, எக்ஸ்சேஞ்ச் போனஸ், கார்ப்பரேட் சலுகைகள் மற்றும் லாயல்டி பலன்களை அள்ளி வீசியுள்ளது.
இதில் அதிகபட்சமாக எம்ஜி நிறுவனத்தின் பிரீமியம் எஸ்யூவி காரான க்ளோஸ்டர் மாடலுக்கு ரூ.4 லட்சம் வரை அதிரடி தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
1. எம்ஜி க்ளோஸ்டர் (MG Gloster)
-
அதிகபட்ச சலுகை: ரூ. 4,00,000 வரை லாபம்
-
சலுகை விபரம்: ரூ.3.5 லட்சம் நேரடி கேஷ் டிஸ்கவுண்ட் மற்றும் ரூ.50,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் சேர்க்கப்பட்டுள்ளது.
2. எம்ஜி இசட்எஸ் இவி (MG ZS EV)
-
அதிகபட்ச சலுகை: ரூ. 2,55,000 வரை லாபம்
-
சலுகை விபரம்: ரூ.2.15 லட்சம் நேரடி கேஷ் டிஸ்கவுண்ட், லாயல்டி (ரூ.20,000) மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடி (ரூ.20,000) வழங்கப்படுகிறது. கூடுதலாக குறிப்பிட்ட வேரியண்ட்களுக்கு இலவச பொது சார்ஜிங் சலுகையும் உண்டு.
3. எம்ஜி ஆஸ்டர் (MG Astor)
-
அதிகபட்ச சலுகை: ரூ. 85,000 வரை லாபம்
-
சலுகை விபரம்: ரூ.25,000 கேஷ் டிஸ்கவுண்ட், எக்ஸ்சேஞ்ச் போனஸ் ரூ.20,000, லாயல்டி போனஸ் ரூ.20,000 மற்றும் கார்ப்பரேட் ஆஃபர் ரூ.20,000 எனப் பிரிக்கப்பட்டுள்ளது.
4. எம்ஜி காமட் இவி (MG Comet EV)
-
அதிகபட்ச சலுகை: ரூ. 60,000 முதல் ரூ. 80,000 வரை லாபம்
-
சலுகை விபரம்: நாடு முழுவதும் பொதுவான சலுகை ரூ.60,000 ஆகும். ஆனால் தென்னிந்தியாவில் மட்டும் கேஷ் டிஸ்கவுண்ட் ரூ.30,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதால் மொத்தம் ரூ.80,000 வரை சேமிக்கலாம்.
5. எம்ஜி ஹெக்டர் (MG Hector)
-
அதிகபட்ச சலுகை: ரூ. 50,000 வரை லாபம்
-
சலுகை விபரம்: ரூ.10,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ், லாயல்டி பலன்கள் ரூ.20,000 மற்றும் கார்ப்பரேட் சலுகை ரூ.20,000 வழங்கப்படுகிறது.
6. எம்ஜி விண்ட்சர் இவி (MG Windsor EV)
-
அதிகபட்ச சலுகை: ரூ. 50,000 வரை லாபம்
-
சலுகை விபரம்: ரூ.20,000 எக்ஸ்சேஞ்ச், ரூ.20,000 லாயல்டி மற்றும் ரூ.10,000 கார்ப்பரேட் தள்ளுபடி. இதற்கும் இலவச பப்ளிக் சார்ஜிங் பலன்கள் பொருந்தும்.
எம்ஜி நிறுவனத்தின் முன்னாள் முதன்மை எஸ்யூவி காரான க்ளோஸ்டர் (Gloster), தற்பொழுது புதிய ‘மெஜஸ்டர்’ (Majestor) காரின் வருகையால் தனது பிரிவில் அதிகபட்ச தள்ளுபடியைப் பெற்றுள்ளது. டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு போட்டியான இந்த காருக்கு ரூ.3.5 லட்சம் நேரடி தள்ளுபடியாகக் கிடைக்கிறது. மறுபுறம், 461 கிமீ மைலேஜ் தரும் எம்ஜி இசட்எஸ் இவி (ZS EV) எலக்ட்ரிக் காரை வாங்குபவர்கள் தற்பொழுது ரூ.2.15 லட்சம் நேரடி கேஷ் டிஸ்கவுண்ட் மற்றும் இதர பலன்களுடன் சேர்த்து பெரிய தொகையைச் சேமிக்க முடியும்.
அதேபோல், இந்தியாவின் 2025 ஆம் ஆண்டின் பெஸ்ட் செல்லிங் எலக்ட்ரிக் காரான விண்ட்சர் இவி (Windsor EV) மற்றும் நடுத்தர வர்க்கத்தினரைக் கவரும் எம்ஜி ஹெக்டர் ஆகிய கார்களுக்கும் தற்பொழுது சிறப்பான தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எம்ஜியின் மிகவும் மலிவான காமட் இவி (Comet EV) காரை தென்னிந்திய வாடிக்கையாளர்கள் வாங்கும் போது கூடுதல் பலன்களைப் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய குறிப்பு: இந்த தள்ளுபடி மற்றும் சலுகைகள் நீங்கள் வசிக்கும் நகரம், காரின் இருப்பு (Stock Availability) மற்றும் தேர்ந்தெடுக்கும் வேரியண்ட்டிற்கு ஏற்ப மாறுபடலாம் என்பதால், துல்லியமான விபரங்களுக்கு உங்கள் அருகிலுள்ள எம்ஜி கார் டீலரை அணுகித் தெரிந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.





