சூப்பர் கிங்ஸ் குடும்பத்தில் இணைந்த பொல்லார்ட்! SA20 ஏலத்தில் தூக்கிய ஜோபர்க் சூப்பர் கிங்ஸ்!

தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள பிரம்மாண்ட SA20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் மிக முக்கியமான திருப்பமாக, மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் கேப்டனும், அதிரடி ஆல்ரவுண்டருமான கெய்ரன் பொல்லார்ட்டை (Kieron Pollard) ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் (Joburg Super Kings) அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) அணியின் தூணாக விளங்கி, பல வருடங்களாகச் சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணிக்கு எதிரான போட்டிகளில் கடுமையான சவால்களை அளித்தவர் கெய்ரன் பொல்லார்ட். சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களால் மைதானத்தில் எப்போதும் மிகுந்த எதிர்பார்ப்புடன் பார்க்கப்பட்ட பொல்லார்ட், தற்போது முதன்முறையாகச் சூப்பர் கிங்ஸ் குடும்பத்தின் கீழ் இயங்கும் அணியில் இணைந்து விளையாடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SA20 தொடரின் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகத்திற்குச் சொந்தமான அணியாகும். வரவிருக்கும் சீசனில் பொல்லார்ட்டின் அதிரடி பேட்டிங் மற்றும் அனுபவம் வாய்ந்த பந்துவீச்சு ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்குப் மிகப்பெரிய பலத்தைச் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பல ஆண்டுகளாகச் சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு எதிராகப் களத்தில் களமிறங்கி வந்த பொல்லார்ட், இனி மஞ்சள் சீருடையில் சூப்பர் கிங்ஸ் குடும்பத்தின் முக்கிய அங்கமாக விளையாடவுள்ளது சர்வதேச கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.