TVK Government
28 நாளில் 32,055 பேர்! சட்டப்பேரவையை நேரில் பார்க்க குவிந்த மக்கள் – சபாநாயகர் வெளியிட்ட சுவாரஸ்ய தகவல்!
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், கடந்த 28 நாட்களில் மட்டும் 32,055 பேர் பேரவை நிகழ்வுகளை நேரில் கண்டுகளித்துள்ளதாகச் சபாநாயகர் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். தவெக ஆட்சி அமைந்ததில் இருந்து பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் வருகை கணிசமாக உயர்ந்துள்ளது.
மேட்டூர் அணை திறப்பில் விளம்பர அரசியல்! தவெக அரசை விமர்சித்து வெளுத்து வாங்கிய சீமான், டிடிவி தினகரன்!
மேட்டூர் அணையைத் திறக்கும் விவகாரத்தில் தவெக அரசு வெறும் 'ரீல்ஸ்' விளம்பர அரசியலில் ஈடுபடுவதாகவும், மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பதாகவும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் கடுமையாகச் சாடியுள்ளனர்.
“₹60 லட்சம் நிதி நிறுத்தம்… என்ன நடக்கிறது?” – டிவிகே அரசுக்கு எதிராக கருப்பு சட்டையில் மேயர் பிரியா போராட்டம்!
தமிழகத்தில் டிவிிகே ஆட்சியின் கீழ் சென்னை மாநகராட்சிக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகும், பல முக்கிய வளர்ச்சிப் பணிகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளதாக மேயர் ஆர். பிரியா குற்றம் சாட்டியுள்ளார். வார்டு வளர்ச்சி நிதியான ₹60 லட்சம் நிறுத்தப்பட்டதைக் கண்டித்து மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் மேயர் மற்றும் உறுப்பினர்கள் கருப்புச் சட்டை அணிந்து தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து! முதலமைச்சர் விஜயின் முடிவுக்கு அண்ணாமலை, டி.ஆர்.பி.ராஜா கடும் எதிர்ப்பு!
விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்படுவதாக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். ஆனால், இந்த முடிவால் தமிழகத்தின் வளர்ச்சி பெரும் பாதிப்பைச் சந்திக்கும் என எதிர்க்கட்சிகள் எச்சரித்துள்ளன.
Vetri Payanam: பெண்களைக் கவர விஜயின் அடுத்த மாஸ் சர்க்குலர்! ‘வெற்றிப் பயணம்’ கட்டணமில்லா பேருந்து சேவை அறிவிப்பு!
'அன்னபூரணி சூப்பர் 6' திட்டத்தைத் தொடர்ந்து, மகளிருக்கு அனைத்து அரசுப் பேருந்துகளிலும் இலவசப் பயணம் வழங்கும் 'வெற்றிப் பயணம்' திட்டத்தை சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்தார் முதல்வர் விஜய்.
Free LPG: சட்டப்பேரவையில் புயல் கிளப்பிய “அன்னபூரணி சூப்பர் 6”! ஆண்டுக்கு 3 இலவச சிலிண்டர்… முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு!
சட்டப்பேரவை கூட்டத்தொடரில் 110 விதியின் கீழ் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் விஜய், 'அன்னபூரணி சூப்பர் சிக்ஸ்' திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுக்கு 3 இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
‘ரூ.1.05 லட்சம் போனஸ் போல தமிழகத்திலும் சாத்தியமா?’ பொங்கல், தீபாவளி சலுகைகளில் விஜய் அரசுக்கு அக்னிபரீட்சை!
"அண்டை மாநிலத்தில் ரூ.1.05 லட்சம் போனஸ்... தமிழகத்தில் என்ன கிடைக்கப்போகிறது?" ஸ்டாலின் அரசின் 5 ஆண்டு சாதனைகளுக்குப் பின், ஆட்சியைப் பிடித்துள்ள விஜய் அரசு பண்டிகை காலத்தில் சர்ப்ரைஸ் தருமா?
“லேப்டாப், ஹெல்மெட் சைக்கிள், சிறப்புப் பள்ளிகள்!” – தவெக அரசின் கல்வித்துறை பட்ஜெட் அறிவிப்புகள்!
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.44,527 கோடியும், உயர்கல்வித்துறைக்கு ரூ.8,393 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட முக்கிய கல்வித் திட்டங்களின் தொகுப்பு.
டாஸ்மாக்கில் ரூ.10 இப்போது ரூ.20! தவெக ஆட்சியைச் சாடிய டாக்டர் கிருஷ்ணசாமி!
கோயம்புத்தூர் குனியமுத்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்த புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி, தவெக ஆட்சியில் டாஸ்மாக் நிர்வாகம் குறித்துக் காட்டமான விமர்சனங்களை வைத்துள்ளார்.









