இந்திய இருசக்கர வாகனச் சந்தையில் தனக்கென தனி ராஜராஜ பேரரசை உருவாக்கியுள்ள ‘யமஹா’ நிறுவனம், ரேசிங் பிரியர்களைக் குஷிப்படுத்தும் வகையில் புதிய அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பிரபல R-சீரிஸ் வரிசையில் முதல்முறையாக 200cc பிரிவில் கால்பதிக்கும் வகையில் ‘யமஹா YZF-R2’ மோட்டார் சைக்கிளை இந்தியாவில் உலகளாவிய அறிமுகமாக (Global Debut) களம் இறக்கியுள்ளது.
இந்திய மற்றும் ஜப்பான் பொறியியல் குழுக்களின் கூட்டு தயாரிப்பில் உருவான இந்த பைக், முற்றிலும் புதிய பிளாட்பாரத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. புதிய YZF-R2 தொடக்க பதிப்பின் டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 2,30,500 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் Quick Shifter மாடல் ரூ. 2,39,500 விலையிலும், டாப்-எண்ட் YZF-R2 M மாடல் ரூ. 2,53,000 விலையிலும் விற்பனைக்கு வந்துள்ளன. 5 ஈர்க்கர்க்கும் வண்ணங்களில் கிடைக்கும் இந்த பைக்கிற்கான முன்பதிவு ஏற்கனவே நிறைவடைந்து, செப்டம்பர் நடுப்பகுதியில் விநியோகம் தொடங்கவுள்ளது.
இந்த பைக்கின் மிக முக்கியமான சிறப்பம்சம் இதன் 204cc, லிக்குவிட்-கூல்டு, DOHC single-cylinder என்ஜின் ஆகும். இது 26.5 PS ஆற்றலையும் 19.1 Nm டார்க்கையும் வழங்கும் திறன் கொண்டது. யமஹாவின் முதன்மை பைக்கான YZF-R1 தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப்படும் ‘Diamond-Like Carbon’ (DLC) கோட்டிங் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளதால், உராய்வு குறைந்து அசுர வேகம் கிடைக்கும். 6-ஸ்பீடு கியர்பாக்ஸ், அசிஸ்ட் & ஸ்லிப்பர் கிளட்ச் மற்றும் 3 கியர் மாற்றும் ‘Quick Shifter’ தொழில்நுட்பம் ஆகியவை இதில் இடம்பெற்றுள்ளன.
வெறும் 149 கிலோ எடையுடன், தன் பிரிவிலேயே மிகக் குறைந்த எடை கொண்ட பைக்காக இது உருவெடுத்துள்ளது. 5-இன்ச் டிஎஃப்டி டிஸ்ப்ளே (TFT Display), டிராக்ஷன் கண்ட்ரோல் மற்றும் ரைடிங் மோடுகள் (Street, Sport, Rain) போன்ற அதிநவீன அம்சங்களுடன் களம் இறங்கியுள்ள இந்த YZF-R2, கேடிஎம் ஆர்சி 200 (KTM RC 200) மற்றும் ஹீரோ கரிஸ்மா எக்ஸ்எம்ஆர் (Hero Karizma XMR) பைக்குகளுக்கு கடுமையான போட்டியைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.





