சிம் கார்டு இல்லாமலேயே 1 கிமீ தூரம் பேசலாம்! இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 20 மொபைலின் அதிரடி அம்சங்கள்… வியப்பில் ஆழ்த்திய விலை மலிவு போன்!

ஜூன் 8 ஆம் தேதி இந்திய சந்தையில் பிளிப்கார்ட் தளம் வழியாகப் பிரம்மாண்டமாக அறிமுகமாக இருக்கும் “இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 20” (Infinix Smart 20) ஸ்மார்ட்போனின் முக்கிய உள்கட்டமைப்பு விபரங்கள் ஏற்கனவே வெளியான நிலையில், தற்பொழுது இந்த மொபைலின் ஒட்டுமொத்த அசாத்திய சிறப்பம்சங்களும் அதிகாரப்பூர்வமாகப் பொதுவெளியில் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒரு பட்ஜெட் ரக ஸ்மார்ட்போனில் இதுவரை எந்தவொரு நிறுவனமும் வழங்காத பல அரிய உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பங்களை இன்பினிக்ஸ் நிறுவனம் இந்த மாடலில் ஒருங்கிணைத்துள்ளது தற்பொழுது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மின்-வர்த்தக பக்கங்களில் தற்பொழுது வெளியாகியுள்ள இந்த புதிய விபரங்கள் பயனர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

இந்த புதிய இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 20 ஸ்மார்ட்போனின் முன்பக்கம் தற்போதைய ட்ரெண்டிற்கு ஏற்றவாறு நேர்த்தியான “6.78 இன்ச் பஞ்ச்-ஹோல்” வடிவமைப்புடன் கூடிய 120Hz மென்மையான திரை வழங்கப்பட்டுள்ளது. இதன் அதிவேக செயல்பாட்டிற்கு உத்திரவாதம் அளிக்கும் வகையில், இதன் உட்புறத்தில் “மீடியாடெக் ஹீலியோ ஜி81 அல்டிமேட்” என்னும் அதிநவீன பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. இது பட்ஜெட் விலையில் தடையற்ற கேமிங் மற்றும் தினசரி பயன்பாட்டிற்கு மிகச்சிறந்த செயல்திறனை வழங்கும் ஆற்றல் கொண்டது.

மேலும், இதில் நீண்ட நேரம் உழைக்கக்கூடிய ஒரு பெரிய 5,200mAh பேட்டரி மற்றும் அதனைப் பாதுகாப்பாக சார்ஜ் செய்ய 15W சார்ஜிங் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. தண்ணீ மற்றும் தூசியால் மொபைல் எளிதில் பழுதடையாமல் இருக்க இதற்கு IP64 தரச்சான்றிதழ் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  ஸ்மார்ட்போன் சந்தையை காலி செய்ய வரும் புதிய போன்! 7560mAh பேட்டரி.. மிரள வைக்கும் விலை!

இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 20 ஸ்மார்ட்போனின் மிக முக்கியமான மற்றும் உலகை வியக்க வைக்கும் அம்சம் என்னவென்றால், இதில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள “அல்ட்ரா லிங்க்” தொழில்நுட்பம் தான். இதன் மூலம், மொபைலில் எவ்வித சிம் கார்டு அல்லது மொபைல் நெட்வொர்க் சிக்னல் இல்லாமலேயே, மற்றொரு இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 20 சாதனத்துடன் சுமார் 1 கிலோமீட்டர் தொலைவு வரை மிகத் தெளிவாக வாக்கி-டாக்கி போல இலவசமாகப் பேசிக் கொள்ள முடியும்.

இதனுடன் சேர்த்து, அழைப்புகளின் போது பின்னணி இரைச்சலை முழுமையாகத் தவிர்க்கும் “ஸ்மார்ட் நாய்ஸ் கேன்சலேஷன்” வசதியும், செயற்கை நுண்ணறிவு அம்சங்களை ஒரே கிளிக்கில் அணுக உதவும் “ஒன் டாப் இன்பினிக்ஸ் ஏஐ பட்டன்” என்னும் தனித்துவமான ஹார்டுவேர் பட்டனும் இதில் வழங்கப்பட்டுள்ளது. வெறும் 7.7 மிமீ மெலிதான வடிவமைப்புடன் நான்கு விதமான அட்டகாசமான நிறங்களில் வெளியாக உள்ள இந்த போன், பட்ஜெட் விலையில் இந்திய சந்தையில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.