கடந்த காலத்தில் ரூ.1,200 முதல் ரூ.1,500 வரை விற்கப்பட்ட 25 கிலோ அரிசி மூட்டையின் விலை, தற்போது ரூ.2,000-ஐ தாண்டி உயர்ந்துள்ளதால் சாமானிய மற்றும் நடுத்தரக் குடும்பங்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கிலோ ரூ.50 ஆக இருந்த அரிசியின் சில்லறை விலை தற்போது ரூ.80 முதல் ரூ.100 வரை நெருங்கி வருகிறது. ஏற்கனவே பருப்பு, சமையல் எண்ணெய் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் தவித்து வரும் மக்களுக்கு இந்த அரிசி விலை ஏற்றம் கூடுதல் சுமையாக மாறியுள்ளது.
இதற்கிடையே எல் நினோ தாக்கத்தால் மழைப்பொழிவு குறைந்து, கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நாட்டின் வரி திமுபடி சரியக்கூடும் என்று தொழில் துறை அமைப்புகள் எச்சரித்துள்ளன. வழக்கமான பருவமழைக் காலத்தில் சுமார் 13 சதவீதம் குறைவான மழையே பதிவாகியுள்ளதால், வரவிருக்கும் நாட்களில் அரிசிக்குக் கடும் பற்றாக்குறை ஏற்பட்டு விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.
இந்த சூழ்நிலையைச் சமாளிக்கவும், வணிகர்கள் செயற்கை பற்றாக்குறையை உருவாக்குவதைத் தடுக்கவும் மத்திய அரசு அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. திறந்தவெளி சந்தை விற்பனை திட்டத்தின் (OMSS) கீழ் தனியார் வியாபாரிகளுக்கு விநியோகிக்கப்படும் அரிசியின் அளவை 50 லட்சம் மெட்ரிக் டன்னாக மத்திய அரசு உயர்த்தி அறிவித்துள்ளது. ஏற்கனவே இத்திட்டத்தின் கீழ் 25 லட்சம் மெட்ரிக் டன் அரிசி விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த இலக்கு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாகத் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் அரிசி பற்றாக்குறை ஏற்படாமல் தடுக்க 2027 ஜனவரி 31 வரை அரிசி விநியோகம் செய்ய சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சந்தையில் அரிசி இருப்பு அதிகரித்து, வரவிருக்கும் நாட்களில் 25 கிலோ அரிசி மூட்டையின் விலை மீண்டும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.