மனிதர்களைப் போலவே கைவரிசை காட்டிய ரோபோ! ஜெர்மனியில் அரங்கேறிய படுபயங்கர அத்துமீறல்!

தொழில்நுட்பத்தின் உச்சம் மனிதகுலத்திற்கு வரப்பிரசாதமாக இருக்க வேண்டும்; ஆனால், அதுவே வக்கிர புத்தி கொண்ட மிருகங்களின் கைகளில் சிக்கும்போது எத்தகைய கோரமான விபரீதங்களை உருவாக்கும் என்பதற்கு ஜெர்மனியில் அரங்கேறியுள்ள இந்தச் சம்பவம் ஒரு முகம் சுளிக்க வைக்கும் சாட்சியாகும்! ஜெர்மனியின் புகழ்பெற்ற கொலோன் நகரில் கடந்த வாரத்தில் நடந்தேறிய இந்த வெட்கக்கேடான செயல் தற்போது உலக நாடுகளை உலுக்கியுள்ளது. அறிவியல் உலகைக் வியக்க வைக்கும் ரோபோக்கள் போன்ற நவீன இயந்திரங்களைக் கூடத் தங்களது மட்டமான எண்ணங்களுக்கும் வக்கிர புத்திக்கும் பயன்படுத்தும் சில அயோக்கியர்களின் சில்மிட்டாட்டங்கள் எல்லை மீறிச் செல்வதை என்னவென்று சொல்வது?

வீதிகளில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்களின் அருகில் சென்று ரோபோ (Robot) ஒன்று திடீரென அவர்களைக் கட்டிப்பிடிப்பதும், ஒரு சிறுமியைப் பாலியல் ரீதியாக அநாகரிகமாகத் தொட்டு அத்துமீறுவதும் நடந்துள்ளது. அதைக் கண்டு அதிர்ந்துபோய் நின்ற 16 வயது சிறுமிக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதி, சாதாரண தொழில்நுட்பக் கோளாறு அல்ல; திட்டமிடப்பட்ட வக்கிர செயல் என்பது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இந்தச் அநாகரிகச் செயலை இரண்டு டீனேஜ் இளைஞர்கள் தங்களது சோஷியல் மீடியா லைவ் (Social Media Live)-யில் எந்தவொரு குற்ற உணர்ச்சியுமின்றிப் பெருமையாக ஒளிபரப்பியிருப்பது மனிதநேயத்தின் மீதான சாவுமணியாகும்!

அந்த ரோபோவின் உண்மையான எஜமானராகச் செயல்பட்ட 16 வயது சிறுவனும் அவனது நண்பனும் இணைந்துதான், ரிமோட் அல்லது இதர கட்டுப்பாட்டு சாதனங்கள் மூலம் அந்த ரோபோவை வேண்டுமென்றே இயக்கி இந்த அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர் என்பதை ஜெர்மன் காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையில் கண்டுபிடித்துள்ளனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட சிறுவர்களின் செல்போன்கள் மற்றும் ரோபோவைக் கைப்பற்றியுள்ள காவல் துறையினர், இது முன்கூட்டியே திட்டமிடப்பட்டு புரோகிராம் செய்யப்பட்ட செயலா அல்லது அப்போதைக்கு அப்போதே கைவரிசை காட்டிய சதியா என்ற கோணத்தில் கடுமையான விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். தொழில்நுட்பத்தை ஆக்கப்பூர்வமான வளர்ச்சிக்குப் பயன்படுத்தாமல், இத்தகைய இழிவான செயல்களுக்குப் பயன்படுத்தும் மிருகங்களுக்குச் சட்டத்தின் மூலம் கடுமையான தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த நாகரிக சமூகத்தின் கொந்தளிப்பான கோரிக்கையாக உள்ளது!