தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வந்த நிலையில், இன்று ஜூன் 12 ஆம் தேதி ஒரே நாளில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிரடியாக உயர்ந்து பொதுமக்களுக்கும் இல்லத்தரசிகளுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.300 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,800 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக, ஒரு சவரன் ஆபரணத் தங்கம் நேற்று மாலை சந்தை முடிவில் ரூ.1,08,000 ஆக இருந்த நிலையில், இன்று ஒரே நாளில் ரூ.2,400 அதிகரித்து தற்பொழுது ரூ.1,10,400 என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
தங்கத்தின் விலையைப் போலவே வெள்ளியின் விலையும் இன்று ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.260 ஆக இருந்த நிலையில், இன்று கிராமிற்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.265 ஆக விற்பனையாகிறது. இதனால் நேற்று ரூ.2,60,000 ஆக இருந்த ஒரு கிலோ வெள்ளியின் விலை இன்று ஒரே நாளில் ரூ.5,000 அதிரடியாக உயர்ந்து ரூ.2,65,000 ஆக மாறியுள்ளது. உலகளாவிய சந்தை மாற்றங்களே இந்த திடீர் விலை உயர்வுக்குக் முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.





