கடந்த சில நாட்களாக மாற்றமின்றி ஒரே விலையில் நீடித்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று (மே 19, 2026) ஒரே நாளில் வரலாறு காணாத வகையில் அதிரடியாக உயர்ந்து சவரன் 1 லட்சத்து 19 ஆயிரத்தை நெருங்கியுள்ளது பொதுமக்களுக்குப் பேரதிர்ச்சியை அளித்துள்ளது.
சென்னையில் இன்று (மே 19, 2026) 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் நேற்று விற்கப்பட்ட விலையிலிருந்து ரூ.120 உயர்ந்து ரூ.14,870 ஆக விற்பனையாகிறது. இதன் காரணமாக, ஒரு சவரன் தங்கம் ஒரே நாளில் ரூ.960 அதிரடியாக அதிகரித்து ரூ.1,18,960 என்ற புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
தங்கத்தின் விலை இந்த அளவுக்கு எகிறியுள்ள நிலையில், வெள்ளியின் விலை இன்று எவ்வித மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே நீடிக்கிறது. அதன்படி, ஒரு கிராம் வெள்ளி ரூ.300 என்ற விலையிலும், ஒரு கிலோ வெள்ளி ரூ.3,00,000 என்ற விலையிலும் எவ்வித மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் நிலையற்ற பொருளாதாரச் சூழலே தங்கம் விலை திடீரென உயரக் காரணம் என வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.





