“தங்கம் வாங்குற பிளான் இருக்கா?” ராக்கெட் வேகத்தில் உயர்ந்த தங்கம், வெள்ளி விலை! இன்றைய முழு விபரம்!

தமிழகத்தில் இன்று தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளதால், நகை வாங்கத் திட்டமிட்டிருந்த பொதுமக்கள் மற்றும் நடுத்தர குடும்பத்தினர் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய நிலவரப்படி, ஆபரணத் தங்கத்தின் (22 கேரட்) விலை ஒரு கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.13,180 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக ஒரு சவரன் தங்கம் விலை ரூ.240 அதிகரித்து ரூ.1,05,440 என்ற புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

கடந்த ஜூன் 14ஆம் தேதியுடன் ஒப்பிடும் போது இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் இன்று ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.5 அதிகரித்து ரூ.240-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.5,000 உயர்ந்து ரூ.2,40,000-க்கும் தற்பொழுது விற்பனையாகிறது.

சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் காரணமாகத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருவதாகத் தங்கம் வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  “விடுபட்டவங்களுக்கு சூப்பர் சான்ஸ்!” +2 மற்றும் +1 துணைத்தேர்வு தேதிகள் அறிவிப்பு! 233 மையங்களில் எக்ஸாம்!: ஜூன் 29 முதல் ஜூலை 16 வரை நடக்கும் தேர்வுகள்! மொத்தம் 63,447 மாணவர்கள் பங்கேற்பு! முழு விபரங்கள் உள்ளே!