தங்கம் விலை அதிரடி வீழ்ச்சி! சவரனுக்கு ரூ.3,000க்கு மேல் குறைந்தது!]: நகைப்பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி! வெள்ளி விலையும் தடாலடி குறைவு! இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம் இதோ!

சென்னையில் ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று (ஜூன் 19, 2026) அதிரடி வீழ்ச்சியைக் கண்டுள்ளது நகைப்பிரியர்கள் மற்றும் நுகர்வோர் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதன்படி, இன்று சந்தையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.13,570 ஆகவும், ஒரு சவரன் (8 கிராம்) தங்கம் ரூ.1,08,560 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. இது நேற்று ஜூன் 18-ஆம் தேதியின் விலையுடன் ஒப்பிடுகையில், கிராமுக்கு ரூ.380-ம், சவரனுக்கு ஒட்டுமொத்தமாக ரூ.3,040-ம் அதிரடியாகக் குறைந்துள்ளது.

தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளியின் விலையும் இன்று மிகக் கடுமையான சரிவைச் சந்தித்துள்ளது. இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.255.00 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,55,000.00 ஆகவும் விற்பனையாகிறது. இது நேற்றைய விலையை விட கிராமுக்கு ரூ.15-ம், கிலோவுக்கு ரூ.15,000-ம் சரிவடைந்துள்ளதை காட்டுகிறது. இந்த திடீர் விலை வீழ்ச்சி காரணமாக, நகைக்கடைகளில் தற்பொழுது வாடிக்கையாளர்களின் வருகை கணிசமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  சட்டமன்றத்தில் உதயநிதி அதிரடி!: "வாயைத் திறங்க சிஎம்!" கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா! தவெக அரசின் முதல் கூட்டத்தொடரில் பயங்கர மறியல்!