Gold Silver Rate Down: நகைப்பிரியர்களுக்கு நிம்மதி! இன்று (மே 16, 2026) தங்கம் விலை சற்று குறைவு; வெள்ளி விலையில் பலத்த வீழ்ச்சி – முழு விபரம் உள்ளே!

தமிழகத்தில் இன்று ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை சற்று குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்று (மே 16, 2026) நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ₹14,750 ஆகவும், ஒரு சவரன் ₹1,18,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று சந்தை முடிவில் ஒரு கிராம் தங்கம் ₹14,765 ஆகவும், ஒரு சவரன் ₹1,18,120 ஆகவும் இருந்த நிலையில், இன்று கிராமுக்கு ₹15-ம், சவரனுக்கு ₹120-ம் குறைந்துள்ளது.

மறுபுறம், வெள்ளியின் விலையில் இன்று அதிரடி வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ஒரு கிராம் வெள்ளி ₹15 குறைந்து ₹290.00 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ₹15,000 சரிந்து ₹2,90,000.00 ஆகவும் விற்பனையாகிறது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ₹305-க்கும், கிலோ ₹3,05,000-க்கும் விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சர்வதேச சந்தை மாற்றங்களால் இந்த விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  "தொடர்ந்து குறையும் தங்கம் விலை!" - சென்னையில் இன்று (ஏப்ரல் 24, 2026) சவரனுக்கு ரூ.480 சரிவு; வெள்ளி விலையும் வீழ்ச்சி!