சமைச்சு சாப்பிட்டாலும் பாக்கெட் காலி! கிரிசில் அறிக்கையை பார்த்து மேனேஜரிடம் சம்பள உயர்வு கேளுங்க!

“ஹோட்டல்ல சாப்பிட்டா காசு கரையுதுப்பா, இனிமே தினமும் வீட்ல இருந்தே டிபன் பாக்ஸ் கட்டுவோம்” அப்படின்னு அப்பாவித்தனமா நினைச்ச கார்ப்பரேட் ஜீவன்களுக்குக் கிரிசில் (CRISIL) அமைப்பு வழக்கம் போல ஒரு பெரிய ஆப்ப அடிச்சிருக்கு. “தம்பி, நீங்க வீட்ல சமைச்சு சாப்பிட்டாலும் நாங்க பட்ஜெட்டை காலி பண்ணுவோம்ல”ங்குற டைப்ல, கிரிசில் இன்டலிஜென்ஸ் வெளியிட்டிருக்க ‘ரொட்டி ரைஸ் ரேட்’ அறிக்கை அமைஞ்சிருக்கு. இனிமேல் ஸ்விக்கி, சோமேட்டோவை அன்இன்ஸ்டால் பண்ணிட்டு வீட்ல சமைச்சாலும் பாக்கெட்ல காசு தங்காதுங்குறது தான் தற்போதைய நிதர்சனம்!

இந்த கிரிசில் அறிக்கையை எடுத்துப் பார்த்தா, கடந்த வருஷம் ஆகஸ்ட் மாசத்தோட இந்த ஆகஸ்ட் மாசத்தை கம்பேர் பண்ணும்போது, சைவ தாலியோட விலை 1 சதவீதம் கூடி ₹29.50 ஆகிடுச்சாம். “சரி, அசைவத்துக்கு மாறுவோம்”னு நினைச்சா, அங்கதான் பெரிய செக்! அசைவ தாலியோட விலை கடந்த ஆண்டை விட அசாத்தியமா 5 சதவீதம் எகிறி ₹57.50-க்கு போயிருச்சு! சிக்கன் விலை கண்டபடி 10 சதவீதம் உயர்ந்தது தான் இந்த அசைவப் பிரியர்களின் பாக்கெட்டைப் பதம் பார்த்ததுக்கு முக்கிய காரணமாம்.

இதுல கொடுமை என்னன்னா, சமையல் கட்டோட தளபதிகளான வெங்காய விலை 43 சதவீதம் உயர்ந்து கிலோ ₹40-க்கு விக்குது, சமையல் எண்ணெய் 11 சதவீதம் எகிறியிருக்கு, சமையல் கேஸ் சிலிண்டரும் தன் பங்குக்கு 10 சதவீதம் எகிறியிருக்கு! உருளைக்கிழங்கும் தக்காளியும் கொஞ்சம் விலை குறைஞ்சு காப்பாத்தலைன்னா, நிலைமை இன்னும் மோசமாகியிருக்கும். வர்ற ரெண்டு மூணு மாசத்துல வெங்காய வரத்து குறையப்போகுது, அதனால விலை இன்னும் ஏறும்னு கிரிசில் டைரக்டர் புஷன் சர்மா வேற பயமுறுத்துறாரு!

இதையும் படிக்க தவறாதீர்கள்:  வேலையே இல்லாம சம்பளம் வாங்குறீங்களா? ஆபத்து தான்! புனே இளைஞரின் வைரல் வீடியோ!

சுருக்கமாச் சொன்னா, கஷ்டப்பட்டு ஓவர்டைம் பார்த்து ஒர்க் பண்ற உங்களுக்கு, வீட்ல சமைக்கிற ஒரு தட்டு சோத்தைக் கூட நிம்மதியா சாப்பிட முடியாத அளவுக்கு பணவீக்கம் கழுத்தைப் பிடிக்குது. அதனால, இனியும் தாமதிக்காம இந்த ஆர்ட்டிக்கிள் லிங்கை உடனே உங்க மேனேஜருக்கு ஸ்லேக்லயோ இல்ல மின்னஞ்சல்லயோ ஃபார்வர்ட் பண்ணி, “சார்.. கிரிசில் அறிக்கைப் படியே என் டிபன் பாக்ஸ் பட்ஜெட் இடிக்குது, உடனே ஒரு 20% அப்பிரைசலைப் போட்டு விடுங்க!” என உரிமையோடு கேளுங்கள்!