‘ரூ.1.05 லட்சம் ஓணம் போனஸ்!’ 4,000 ஊழியர்களுக்கு அதிரடி சர்ப்ரைஸ் கொடுத்த மாநில அரசு!

கேரள மாநில அரசின் மதுபான விற்பனைக் கழகமான ‘பெவ்கோ’ (BEVCO), வரவிருக்கும் ஓணம் பண்டிகையை முன்னிட்டுத் தனது ஊழியர்களுக்கு தலா ரூ.1.05 லட்சம் வரை போனஸ் தொகையாக வழங்க முடிவு செய்து அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கேரளாவில் ஓணம் பண்டிகை வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட உள்ள நிலையில், அரசு நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்களுக்குப் போனஸ் மற்றும் பண்டிகை கால முன்பணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், மாநிலத்திற்கு அதிக வருவாய் ஈட்டித் தரும் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான கேரள மாநிலக் பானங்கள் கழகம் (BEVCO), தனது சுமார் 4,000 நிரந்தர ஊழியர்களுக்கு இந்த மிகப்பெரிய போனஸ் தொகையை உயர்த்திய வழங்கத் தீர்மானித்துள்ளது. இதன்படி, தகுதியுள்ள ஒவ்வொரு ஊழியருக்கும் தலா ரூ.1.05 லட்சம் வரை பண்டிகை கால போனஸாகக் கிடைக்கவுள்ளது.

நிரந்தர ஊழியர்கள் மட்டுமின்றி, நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உழைக்கும் தற்காலிக மற்றும் ஒப்பந்தப் பணியாளர்களையும் ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கும் ஓணம் போனஸ் வழங்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது. தினக்கூலி அடிப்படையில் பணியாற்றுபவர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள் மற்றும் துப்புரவுப் பணியாளர்கள் உள்ளிட்ட தற்காலிக ஊழியர்களுக்கு அவர்களின் பணி அனுபவம் மற்றும் தகுதியின் அடிப்படையில் போனஸ் தொகையும், ஓணம் பண்டிகை சிறப்புப் படியும் வழங்கப்படவுள்ளது.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மதுபான விற்பனை மூலம் கிடைத்த வருவாய் கணிசமாக அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, ஊழியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த போனஸ் உயர்வை நிர்வாகம் அறிவித்துள்ளது. மாநில அரசின் இந்த தாராளமான அறிவிப்பு, பெவ்கோ நிறுவனத்தில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் மற்றும் அவரது குடும்பத்தினரிடையே பெரும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.