தேசிய மருத்துவ நுழைவுத் தேர்வு (NEET UG – 2026) நெருங்கி வரும் வேளையில், மாணவர்களின் நலன் கருதி தேசிய தேர்வு முகமை (NTA) மிக முக்கியமான சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. குறிப்பாக, ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்வதில் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் மாணவர்களின் மன அழுத்தம் ஆகியவற்றிற்குத் தீர்வு காணும் வகையில் இந்த அறிவுறுத்தல்கள் அமைந்துள்ளன.
ஹால் டிக்கெட் பதிவிறக்கம் – புதிய டிப்ஸ்: நீட் ஹால் டிக்கெட்டுகளை neet.nta.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். ஒரே நேரத்தில் பல மாணவர்கள் இணையதளத்தைப் பயன்படுத்துவதால் சில தொழில்நுட்பச் சிக்கல்கள் ஏற்படலாம். இதனைத் தவிர்க்க, பிரவுசரில் ‘Incognito Mode’ (இன்காக்னிட்டோ மோடு) பயன்படுத்திப் பதிவிறக்கம் செய்யுமாறு NTA அறிவுறுத்தியுள்ளது. இதனால் ‘Cache’ மற்றும் ‘Cookies’ தொடர்பான பிழைகளைத் தவிர்க்க முடியும்.
“உயிரை விட எதுவும் முக்கியமல்ல”: தேர்வு குறித்த பயம் மற்றும் பதற்றத்தில் இருக்கும் மாணவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், “உயிரை விட எதுவும் பெரியது அல்ல” என்று NTA உருக்கமாகக் கூறியுள்ளது. மாணவர்கள் தேர்வை ஒரு சவாலாக மட்டுமே பார்க்க வேண்டும், அதனைத் தங்களின் வாழ்வா-சாவா போராட்டமாக மாற்றிக்கொள்ளக் கூடாது என வலியுறுத்தியுள்ளது.
மனநல உதவி எண்கள்: மிகுந்த மன அழுத்தம் அல்லது பதற்றத்தை உணரும் மாணவர்கள், தங்களுக்குத் தெரிந்த மொழிகளிலேயே ஆலோசனைகளைப் பெறப் பிரத்யேக உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
-
14416
-
1-800-891-4416
இந்த எண்களைத் தொடர்பு கொண்டு மாணவர்கள் தங்களின் மனக் கவலைகளைப் பகிர்ந்து கொள்ளலாம். வல்லுநர்கள் அவர்களுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்குவார்கள். மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொள்ள வேண்டும் என்பதே தேசிய தேர்வு முகமையின் நோக்கமாகும்.
குறிப்பு: மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ NTA இணையதளத்தை பின்பற்றவும், என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.





