உலகளாவிய தொழில்நுட்பச் சந்தையில் முன்னணியில் உள்ள என்விடியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான ஜென்சன் ஹுவாங், தனது திருமணத்திற்குப் புறம்பான உறவு குறித்த உண்மையை ஒப்புக்கொண்டு வெளியிட்டுள்ள தகவல் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தன் மனைவியைப் புகழ்ந்து பேசிய சில மாதங்களிலேயே அவர் இந்த விவகாரத்தில் சிக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மனைவியைப் புகழ்ந்து பேசிய ஜென்சன் ஹுவாங்!
சில மாதங்களுக்கு முன்பு பிரபல போட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ஜென்சன் ஹுவாங், தனது 41 வருடத் திருமண வாழ்க்கை மற்றும் தன் மனைவி லாரி மில்ஸ் ஹுவாங்கின் தியாகங்கள் குறித்து உணர்வுபூர்வமாகப் பகிர்ந்துகொண்டார். ஸ்டான்போர்க் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டப் படிப்பை முடித்த சமயத்திலும், என்விடியா நிறுவனத்தைத் தொடங்கிய கடினமான காலங்களிலும் தனது குடும்பத்தையும் வீட்டுச் சூழலையும் லாரி முழுமையாகப் பார்த்துக்கொண்டதாக அவர் தெரிவித்தார்.
அப்போது அவர் பேசுகையில், “என் மனைவி லாரி எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டார். சிறு குழந்தைகளுடன் நான் பிஸியாக இருந்தபோது, பல நிகழ்வுகளை நான் தவறவிட்டேன். ஆனால், லாரி ஒரு முறைகூட, ஒரு நொடிகூடப் புகார் சொன்னது கிடையாது. அது அவர் எனக்கு அளித்த மாபெரும் பரிசு” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருந்தார். மேலும், தன் மனைவி வீட்டில் உறுதுணையாக இருப்பார் என்ற நம்பிக்கையே தன்னைத் தொழிலில் மிகப் பெரிய அபாயங்களை எடுக்கத் தூண்டியதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
ஊழியர்களுக்கு எழுதிய பகிரங்க மன்னிப்புக் கடிதம்!
இந்நிலையில், என்விடியா நிறுவன ஊழியர்களுக்கு ஜென்சன் ஹுவாங் அனுப்பிய நிறுவனத்தின் உள் குறிப்பாணை (internal memo) ஒன்றில், அலுவல் ரீதியான நிர்வாகியான ஆலிஸ் ஹுவாங் என்பவருடன் தனக்குத் தொடர்பிருந்ததை அவர் ஒப்புக்கொண்டார். தன் குடும்பத்திற்குத் தான் துரோகம் இழைத்துவிட்டதாகவும், தனது செய்கை தன் மனைவியையும் குழந்தைகளையும் ஆழமாகப் பாதித்துள்ளதாகவும் அவர் அந்தக் கடிதத்தில் வருத்தம் தெரிவித்தார்.
தமது குடும்பம் தமக்கு எப்போதுமே அன்பையும் ஆதரவையும் வழங்கி வந்துள்ளதாகவும், ஆனால் தான் அவர்களின் நம்பிக்கையைக் சிதைத்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, இந்த விவகாரம் குறித்து என்விடியா நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு தீவிர விசாரணை நடத்தி வருவதுடன், உலகத் தொழில்நுட்பத் துறையில் இது மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ளது.