மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் (EVM) முறைகேடு நடப்பதாகக் குற்றம் சாட்டி, மீண்டும் பழைய ‘பேப்பர் பேலட்’ (Ballot Paper) முறைக்கே மாற வேண்டும் என்று ராகுல் காந்தியும் காங்கிரஸ் கட்சியும் தொடர்ச்சியாக குரல் எழுப்பி வரும் வேளையில், பிரதமர் நரேந்திர மோடி வீசியுள்ள ஒற்றைத் ட்வீட் இந்திய அரசியலில் பெரும் நையாண்டி புயலைக் கிளப்பியுள்ளது. உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, பீகார் மற்றும் கர்நாடகா ஆகிய நான்கு முக்கிய மாநிலங்களில் காலியாக இருந்த 28 சட்ட மேலவை (MLC) தொகுதிகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், காங்கிரஸின் படுதோல்வியைக் கச்சிதமாகப் பயன்படுத்திப் பிரதமர் கொடுத்த பதிலடி இப்போது சோஷியல் மீடியாவில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.
MLC elections in 28 seats across 4 big states – Uttar Pradesh, Maharashtra, Bihar and Karnataka.
Elections held using ballot papers.
Guess how many seats Congress won? 🧐
— Narendra Modi (@narendramodi) October 28, 2026
“உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, பீகார் மற்றும் கர்நாடகா ஆகிய 4 பெரிய மாநிலங்களில் உள்ள 28 தொகுதிகளில் எம்.எல்.சி தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தல்கள் அனைத்தும் பேப்பர் பேலட் மூலமாகவே நடத்தப்பட்டன. காங்கிரஸ் இதில் எத்தனை இடங்களில் வென்றிருக்கும் என்று கொஞ்சம் கணித்துப் சொல்லுங்கள் பார்ப்போம்? 🧐” என்று யோசிக்கும் எமோஜியுடன் பிரதமர் மோடி தனது ‘X’ பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பேப்பர் பேலட் முறையில் தேர்தல் நடந்தபோதிலும், காங்கிரஸ் கட்சி இந்த 28 இடங்களில் ஒரு இடத்தில் கூட ஜெயிக்க முடியாமல் ஒட்டுமொத்தமாக ‘பூஜ்ஜியம்’ (Zero) வாங்கியிருப்பதைத்தான் பிரதமர் மோடி இந்த கூர்மையான நக்கலின் மூலம் அம்பலப்படுத்தியுள்ளார்.
கர்நாடகாவில் ஆட்சியில் இருந்தபோதிலும் அங்குள்ள 4 மேலவை இடங்களையும் பாஜக-ஜேடிஎஸ் கூட்டணி கைப்பற்றியதும், பிற மாநிலங்களிலும் பாஜக அபார வெற்றி பெற்றதும் காங்கிரஸ் முகாமிற்குப் பேரிடியாக அமைந்துள்ளது. தோல்வி வரும்போதெல்லாம் EVM மீது பழியைப் போட்டுத் தப்பிக்கும் எதிர்க்கட்சிகளின் உத்தியை, அவர்கள் கோரிய பேப்பர் பேலட் தேர்தல் முடிவுகளை வைத்தே மோடி தவிடுபொடியாக்கியுள்ளார். மக்களின் ஆதரவு இல்லாததை மறைக்க எந்திரங்கள் மீது குற்றம் சொல்வது பலிக்காது என்பதை இந்த 28 தொகுதி முடிவுகள் நிரூபித்துவிட்டதாகக் கூறி கமலாலய வட்டாரம் இந்த ட்வீட்டைக் கொண்டாடி வருகிறது!