நியூசிலாந்து தொடருக்கு முன்பாக ஆக்லாந்து மைதானத்தில் நடைபெற்ற தீவிரப் பயிற்சிச் அமர்வில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சுப்மன் கில் தனது தலையின் ‘டெம்பிள்’ பகுதியில் ஒரு சிறிய சாம்பல் நிறச் சிலிகான் ஸ்டிக்கரை ஒட்டிப் பந்துவீச்சாளர்களை எதிர்கொண்ட காட்சி இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவியது. “யாராவது நெற்றியில் பேண்ட்-எய்ட் ஒட்டிக்கொண்டு கிரிக்கெட் விளையாடுவார்களா?” என்று பலரும் குழம்பிய வேளையில், விளையாட்டு உலகையே மிரளவைக்கும் ஒரு மாபெரும் தொழில்நுட்பப் புரட்சிதான் அந்தச் சிறிய ஸ்டிக்கர்! சோமாட்டோ நிறுவனத்தின் இணை நிறுவனர் தீபிந்தர் கோயல் குழுவினரால் உருவாக்கப்பட்டு, பேட்மிண்டன் நட்சத்திரம் பி.வி. சிந்துவுக்குப் பிறகு சுப்மன் கில் சோதனை செய்து வரும் இந்த ‘டெம்பிள் டிவைஸ்’ (Temple Device) உண்மையில் என்ன செய்கிறது தெரியுமா? இதோ இதன் வியக்கவைக்கும் தொழில்நுட்ப அம்சங்கள்!
நீங்கள் வழக்கமாக அணியும் ஸ்மார்ட்வாட்ச்கள் மற்றும் ஃபிட்னஸ் பேண்ட்கள் உங்கள் மணிக்கட்டில் உள்ள ரத்த நாளங்கள் மூலம் இதயத் துடிப்பையும், நடந்த அடிகளையும் மட்டுமே கணக்கிடும். ஆனால், இந்த ‘டெம்பிள் டிவைஸ்’ மனித உடலின் மிக முக்கியமான கட்டுப்பாட்டு மையமான மூளையின் செயல்பாடுகளையே நேரடியாகக் கண்காணிக்கும் ஒரு பிரைன் ஃபிட்னஸ் ட்ராக்கர் ஆகும்! மண்டையோட்டின் மிகவும் மெல்லியப் பகுதியான ‘டெம்பிள்’ பகுதியில் ஒட்டப்படும் இந்த அட்வான்ஸ்டு சாதனம், ‘நியர்-இன்ஃப்ராரெட் ஸ்பெக்ட்ரோஸ்கோபி’ (NIRS) என்ற உயர்தர ஆப்டிகல் சென்சார் நுட்பத்தில் இயங்குகிறது. அகச்சிவப்புக் கதிர்களை மூளையின் திசுக்களுக்குள் அனுப்பி, மில்லிசெகண்ட் வேகத்தில் ரத்த ஓட்டம் மற்றும் ஆக்ஸிஜன் செறிவூட்டலின் அளவைக் (Cerebral Blood Flow) கணக்கிடுவதுதான் இதன் முதன்மை வேலையாகும்.
சரி, இதன் மூலம் சுப்மன் கில் போன்ற உலகத்தரம் வாய்ந்த வீரர்களுக்கு என்ன பயன் கிடைக்கும் என்று கேட்கிறீர்களா? ஒரு பந்துவீச்சாளர் 150 கி.மீ வேகத்தில் பந்தை வீசும்போது, வீரரின் மூளை எந்தளவுக்குக் கவனக் குவியலுடன் (Focus Index) இருக்கிறது, அவரது முடிவெடுக்கும் திறன் (Reaction Time) எந்த மில்லிசெகண்டில் இயங்குகிறது, தொடர் பயணங்கள் மற்றும் அழுத்தத்தால் மூளையில் எவ்வளவு மனச்சோர்வு (Cognitive Fatigue) ஏற்பட்டுள்ளது என்பதை இந்தச் சாதனம் துல்லியமான எண்களாக மாற்றித் தருகிறது. ‘பிரைன்-ஃப்ளோ’ மற்றும் ‘என்ட்ரோபி ஸ்கோர்’ மூலம் வீரரின் மூளை சோர்வடையும் நேரத்தைக் கணித்து, எப்போது ஓய்வு தேவை, எப்போது கவணம் பிசகும் என்பதை முன்கூட்டியே எச்சரிப்பதே இதன் மிரளவைக்கும் அம்சமாகும். ஸ்மார்ட்வாட்ச் யுகத்திற்கு விடை கொடுத்து, மனித மூளையையே ட்ராக் செய்யும் இந்த ‘டெம்பிள்’ சாதனம் தான் நாளைய விளையாட்டு உலகின் புதிய சூப்பர் பவர்!