இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் பட்ஜெட் மற்றும் நடுத்தர விலைப்பிரிவில் அசைக்க முடியாத இடத்தைப் பிடித்துள்ள சியோமி (Xiaomi) நிறுவனம், தற்பொழுது தனது புதிய அதிரடி அஸ்திரத்தைக் கையில் எடுத்துள்ளது. சர்வதேச அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய “ரெட்மி டர்போ 5” (Redmi Turbo 5) ஸ்மார்ட்போன், வரும் ஜூன் 16, 2026 அன்று இந்திய சந்தையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட உள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியாவில் வெளியாகும் முதல் ‘டர்போ’ வரிசை மொபைல் இது என்பதால், இதன் மீதான எதிர்பார்ப்பு தற்பொழுது பன்மடங்கு அதிகரித்துள்ளது.
பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் (Amazon) தளத்தில் இதற்கான பிரத்யேக மைக்ரோசைட் தற்பொழுது நேரலை செய்யப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப வல்லுநர்களை வியக்க வைக்கும் வகையில், இந்த ரெட்மி டர்போ 5 மொபைலில் 4 என்எம் (4nm) கட்டமைப்பில் உருவான “மீடியாடெக் டைமன்சிட்டி 8500 அல்ட்ரா” (MediaTek Dimensity 8500 Ultra) சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. இதன் அதிரடி செயல்திறன் காரணமாக, பிரபல அந்துத்து (AnTuTu) சோதனையில் இந்த போன் 2.3 மில்லியனுக்கும் (23 Lakhs+) அதிகமான புள்ளிகளைப் பெற்று புதிய சாதனை படைத்துள்ளது. மேலும், இதில் 12GB எல்பிடிடிஆர்5எக்ஸ் (LPDDR5X Ultra) ரேம் மற்றும் அதிவேக யுஎஃப்எஸ் 4.1 (UFS 4.1) ஸ்டோரேஜ் வசதி வழங்கப்பட்டுள்ளது.
Speed has a new name.
Introducing the all-new #REDMITurbo5, the fastest REDMI ever. Made to move fast, engineered to stay ahead, and designed for those who never slow down.
Always #ReadyWhenYouAre.
Launching on 16th June, 2026.
Get notified: https://t.co/W46X9IMmV4 pic.twitter.com/PJVGv6zb4d— Redmi India (@RedmiIndia) June 5, 2026
அதிகப்படியான பயன்பாட்டின் போது மொபைல் சூடாவதைத் தடுக்க, இதில் மேம்படுத்தப்பட்ட ‘3D ஐஸ்-லூப்’ (3D Ice-Loop Cooling) வெப்ப மேலாண்மை தொழில்நுட்பமும் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனின் மிக முக்கியமான சிறப்பம்சமே இதன் அசுரத்தனமான பேட்டரி பேக்கப் தான். ரெட்மி வரலாற்றிலேயே இல்லாத அளவிற்குக் மிக பிரம்மாண்டமான 7,560mAh பேட்டரி இதில் கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய பேட்டரி இருந்தபோதிலும், கார்பன்-ஃபைபர் கூட்டு தொழில்நுட்பம் மூலம் இந்த போன் மிகவும் மெலிதான எடையுடனேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை மிக வேகமாக சார்ஜ் செய்ய 100W வயர்டு பாஸ்ட் சார்ஜிங் (Wired Fast Charging) வசதியும், மற்ற சாதனங்களை சார்ஜ் செய்ய 27W ரிவர்ஸ் சார்ஜிங் வசதியும் இதில் உள்ளது.
திரையைப் பொறுத்தவரை, 6.59 இன்ச் 1.5K AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 3500 nits உச்ச பிரகாசத்திறன் (Peak Brightness) கொண்டுள்ளதால், வெயிலிலும் இதன் திரையைத் தெளிவாகப் பார்க்க முடியும்.
புகைப்பட பிரியர்களுக்காக இந்த போனின் பின்புறம் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) வசதியுடன் கூடிய 50 மெகாபிக்சல் சோனி IMX882 முதன்மை கேமரா மற்றும் 8 எம்பி அல்ட்ரா-வைட் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கத்தில் 20 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா இடம் பெற்றுள்ளது. இது தவிர, தண்ணீ மற்றும் தூசியால் மொபைல் பாழாகாமல் இருக்க, பிரீமியம் போன்களில் மட்டுமே வழங்கப்படும் IP68 மற்றும் மிக உயரிய IP69 தரச்சான்றிதழ்களும் இதற்கு வழங்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் இந்த ரெட்மி டர்போ 5 ஸ்மார்ட்போனானது ₹50,000-க்கு உட்பட்ட விலைப்பிரிவில் (Expected Under Rs 50,000) வெளியாகும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜூன் 16 அன்று அமேசான் தளத்தில் இதன் இறுதி விலை மற்றும் விற்பனை தேதிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளன.





