“விஜய் கட்சிக்கு போறேனா?” வாயைத் திறக்காமல் செல்லூர் ராஜூ காட்டிய சைகை… பதறிப்போய் மைக்கை பிடுங்கிய அதிமுக நிர்வாகி! மதுரையில் நடந்த செம்ம காமெடி!

மதுரை என்றாலே மல்லிகைப் பூவுக்கும், அதிரடி அரசியல் நகர்வுகளுக்கும் எவ்வளவு பிரபலமோ, அதே அளவுக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவின் கலகலப்பான செய்தியாளர் சந்திப்புகளுக்கும் செம்ம ஃபேமஸ். அந்த வகையில், தற்பொழுது அவர் தமிழக வெற்றிக் கழகத்தில் (TVK) இணையப் போவதாகக் கிளம்பிய வதந்திக்கு அவர் கொடுத்துள்ள ரியாக்ஷன் ஒட்டுமொத்த சோசியல் மீடியாவையும் ஆக்கிரமித்துள்ளது.

கடந்த சில தினங்களாகவே அதிமுகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் சிலர் ஆளும் தவெக நோக்கி ரூட்டை மாற்றி வருவதாகத் தமிழக அரசியல் வட்டாரத்தில் கிசுகிசுக்கள் றெக்கை கட்டிப் பறந்து வருகின்றன. இந்தச் சூழலில், மதுரை மாநகராட்சி எதிர்க்கட்சி குழு தலைவர் சோலைராஜா, சமீபத்தில் விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு ஆதரவாகப் பேசியது பெரும் புயலைக் கிளப்பியது. சோலைராஜா தவெகவுக்குத் தாவப் போகிறார், கூடவே செல்லூர் ராஜூவும் வண்டியேறப் போகிறார் என்று நாளிதழ்களில் செய்திகள் அனல் பறந்தன.

இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க மதுரை மாநகர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் அவசர அவசரமாகச் செய்தியாளர் சந்திப்பு ஒன்று கூட்டப்பட்டது. அதில் முதலில் பேசிய சோலைராஜா, “நான் ஆதவ் அர்ஜுனாவுக்கு ஆதரவாகப் பேசவில்லை. விளையாட்டுத் துறையில் இருப்பவர்கள் அமைச்சராக நீடிப்பதில் தவறில்லை என்ற அர்த்தத்தில்தான் பேசினேன். அதிமுக வழக்கறிஞர் இன்பதுரையை நான் கண்டித்த வாசகங்களைத் தற்பொழுது திரும்பப் பெறுகிறேன்” என்று தவெக வதந்திகளுக்குப் பதறியடித்து விளக்கம் அளித்தார்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  இந்த ஆட்சிக்கும் இயக்குனர் அட்லிக்கும் என்ன தொடர்பு? சட்டமன்றத்தில் இயக்குனர் ‘அட்லி’யால் பரபரப்பு வார்!: "உங்க ஸ்கீம் எல்லாம் அட்லி படம் மாதிரி காப்பி!" தவெக அரசை வம்புக்கு இழுத்த திமுக சிவசங்கர்! "உங்களுக்கு அட்லிய பத்தி இவ்ளோ தெரியுதே?!" - பாய்ந்த அமைச்சர் ராஜ்மோகன்!

இதனைத் தொடர்ந்து, அங்கிருந்த செய்தியாளர்கள் பக்கத்தில் அமர்ந்திருந்த மாஜி அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் மைக் லைன்களைத் திருப்பினர். “சார்… சோலைராஜா விளக்கம் கொடுத்துட்டாரு, ஆனா நீங்களும் தவெகவில் இணையப் போவதாகத் தகவல் வர்றதே, அது உண்மையா?” என்று செய்தியாளர்கள் நேரடியாகக் கொக்கியைப் போட்டனர். “தெர்மாகோல்” புகழ் செல்லூர் ராஜூ சும்மா இருப்பாரா? வழக்கம் போலத் தனது டைமிங் காமெடியை அரங்கேற்றினார்.

இந்தக் கேள்விக்கு வாயைத் திறந்து எந்தவொரு பதிலும் சொல்லாத செல்லூர் ராஜூ, அங்கிருந்த கேமராக்களைப் பார்த்துத் தனது கைவிரல்களால் டக்கென ‘இரட்டை இலை’ சின்னத்தைக் காட்டினார். “நான் எங்கும் போகவில்லை, எப்பொழுதும் இங்கேயே தான் இருக்கிறேன்” என்பதைத் தனது விரல் அசைவிலேயே சைகை மொழியாகத் (Sign Language) தெரிவித்துவிட்டு, மைக்கை அப்படியே போட்டுவிட்டு அங்கிருந்து கூலாகப் புறப்பட்டுச் சென்றார்.

“அண்ணன் செல்லூர் ராஜூ எப்பவுமே மாஸ் தான்யா… பஞ்ச் டயலாக் பேசாமலே ஒரே ஒரு சைகையில வதந்திக்கு முற்றுப்புள்ளி வச்சுட்டாரு!” என்று மதுரை ரத்தத்தின் ரத்தங்கள் தற்பொழுது இந்த வீடியோவை மீம்ஸ் போட்டு இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.