Political Clash: “தூத்துக்குடி வந்தால் சட்டை கிழியும்!” தவெக ஆதவ் அர்ஜுனாவுக்கு திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஓபன் வார்னிங்!

தமிழக அரசியல் களத்தில் திமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) இடையேயான வார்த்தைப் போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்த நிலையில், தவெகவின் முக்கிய நிர்வாகியான ஆதவ் அர்ஜுனாவை எச்சரிக்கும் வகையில் திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியுள்ள கருத்துக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கிளப்பியுள்ளன.

தூத்துக்குடியில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் பேசிய அனிதா ராதாகிருஷ்ணன், எல்லையை மீறி பேசுபவர்களுக்கு தொண்டர்கள் மூலமாக தகுந்த பாடம் புகட்டப்படும் என்று ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தில் இருக்கும் ஆதவ் அர்ஜுனா, தொடர்ந்து தங்களின் திமுக தலைவரையும், இளம் தலைவரையும் (உதயநிதி ஸ்டாலின்) தேவையில்லாமல் சீண்டிப் பார்த்து வருவதாக அனிதா ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டினார். புதிய கட்சி தொடங்கிவிட்டோம் என்ற மிதப்பில் தொடர்ந்து தரம் தாழ்ந்த விமர்சனங்களை முன்வைத்து வருவதாகவும், இதனை திமுக தொண்டர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஆதவ் அர்ஜுனா தனது பேச்சுக்களை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று எச்சரித்த முன்னாள் அமைச்சர், “இப்படியே அவர் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தால், அவர் தூத்துக்குடி மாவட்டத்திற்குள் வரும்போது அவரது சட்டை கிழியும் நிலையை நம்முடைய திமுக தொண்டர்கள் உருவாக்குவார்கள்” என்று மிக நேரடியாகவும் பகிரங்கமாகவும் எச்சரிக்கை விடுத்தார்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  "₹100 கோடி தாரோம்.. திமுகவுக்கு வா.. இல்லனா லாரி ஏத்திடுவோம்!" தவெக எம்எல்ஏ வெளியிட்ட அதிரடி ஆடியோ ஆதாரம்!

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு இரு கட்சித் தலைமைகளும், நிர்வாகிகளும் மாறி மாறி கடுமையான அரசியல் விமர்சனங்களை முன்வைத்து வரும் சூழலில், அனிதா ராதாகிருஷ்ணனின் இந்த “சட்டை கிழியும்” என்ற ஆவேசப் பேச்சு தூத்துக்குடி மற்றும் தென் மாவட்ட அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தவெக தரப்பிலிருந்து என்ன மாதிரியான எதிர்வினைகள் வரப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.