தமிழகத்தில் கடந்த சில நாட்களாக புதிய உச்சங்களை நோக்கிச் சென்று கொண்டிருந்த தங்கம் மற்றும் வெள்ளி விலையில், இன்று சற்று வீழ்ச்சி ஏற்பட்டு நடுத்தர மக்களுக்கு ஓரளவு ஆறுதலைத் தந்துள்ளது.
அதன்படி, இன்று (ஜூன் 16, 2026) நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.14,060 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம், ஒரு சவரன் தங்கம் நேற்றுடன் (ஜூன் 15) ஒப்பிடுகையில் ரூ.80 சரிந்து, ரூ.1,12,480 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் இன்று கணிசமாகக் குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி நேற்றைய விலையை விட ரூ.5 குறைந்து ரூ.275-க்கு விற்பனையாகிறது. இதனால், ஒரு கிலோ வெள்ளியின் விலை ஒரே நாளில் ரூ.5,000 சரிந்து ரூ.2,75,000 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. உலகளாவிய சந்தை மாற்றங்கள் காரணமாக இந்த விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகப் பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.