தண்ணீர் தர மாட்டோம் என்கிறவர்களுடன் எப்படி கூட்டணி? “நேரு மாமா இல்லை இப்போ? அதான் நம்ம பொட்டு மாமா இருக்காரே! தமிழக அரசை நோக்கி சீமான் சரமாரி கேள்வி!

கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார் மேகதாது அணை கட்டியே தீருவோம் எனத் தெரிவித்த கருத்துகளுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவரிடம், அணை விவகாரத்திலும் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டன.

இதற்குக் பதிலளித்துப் பேசிய சீமான், “அணை கட்டியே தீருவேன், தண்ணீர் தரவே மாட்டேன் என்கிறார்கள். அப்படியிருக்கும்போது அந்த மாநிலத்தைக் கட்டுப்படுத்தும் காங்கிரஸ் கட்சியோடு உங்களால் எப்படி கூட்டணி வைக்க முடிகிறது? நமது உரிமைகளைப் பறிக்கும் ஒரு கட்சியோடு கூட்டு வைத்துக்கொண்டு நீங்கள் மக்களை என்ன காப்பாற்றப் போகிறீர்கள்? அகில இந்திய காங்கிரஸ் தலைமை என்ன முடிவெடுக்கும் என்பதை என்னிடம் கேட்டால் என்ன செய்வது? நான் ஜீரோ, போய் ஹீரோவிடம் கேளுங்கள்” என்று ஆவேசமாகத் தெரிவித்தார். தமிழகத்தின் நீர் உரிமைகளைத் தொடர்ந்து மறுக்கும் அண்டை மாநிலக் கட்சிகளுடன் தமிழகத்தில் உள்ள கூட்டணி கட்சிகள் உறவு வைத்திருப்பதை அவர் கடுமையாகச் சாடினார்.

இதற்கிடையே, பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட குழந்தைகள் தின வாழ்த்து மடலில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் புகைப்படம் இடம்பெறாதது குறித்த கேள்விக்குச் சீமான் தனது உரித்தான பாணியில் பதிலளித்தார். “நேரு மாமா இல்லை என்றால் என்ன? பொட்டு மாமா இருக்காரே” என்று அவர் கிண்டலாகக் குறிப்பிட்டது அங்கிருந்தவர்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியதுடன், அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகவும் மாறியுள்ளது.