இரவு 11.30 மணி ஆய்வு என்ற பெயரில் அத்துமீறலா… தவெக எம்.எல்.ஏக்கள் மீது முன்னாள் சபாநாயகர் அப்பாவு குற்றச்சாட்டு!

கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாகவும், தவெக அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்களின் செயல்பாடுகள் குறித்தும் முன்னாள் சபாநாயகர் அப்பாவு கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். முதல்வர் விஜய் தலைமையிலான அரசு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவர் விமர்சித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் தொடர்பான புகார் கடந்த ஜூலை 31-ஆம் தேதி அளிக்கப்பட்ட நிலையில், அந்த வழக்கை மூடி மறைக்க முதல்வர், தலைமைச் செயலாளர் மற்றும் உள்துறை தொடர்பான பொறுப்பில் உள்ளவர்கள் முயன்றதாக அப்பாவு குற்றம் சாட்டியுள்ளார். இதன் காரணமாக அருள் விக்னேஷை விடப் பெரிய தவறை முதல்வர் விஜய் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இரவு 11.30 மணி அளவில் காவல் நிலையங்களுக்குச் செல்லும் தவெக எம்.எல்.ஏக்கள், குடிபோதையில் ஆய்வு செய்வதாகக் கூறி அங்குள்ள பெண் காவல் அதிகாரிகளிடம் அத்துமீறி நடந்து கொள்வதாகவும் அப்பாவு கூறியுள்ளார்.

அதேபோல், இரவு 11.30 மணிக்கு அரசு மருத்துவமனைகளுக்குச் சென்று ஆய்வு செய்வதாகக் கூறி தவெக எம்.எல்.ஏக்கள் பெண் மருத்துவர்களிடமும் தவறாக நடந்து கொள்வதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து அரசியல் வட்டாரங்களில் விவாதம் எழுந்துள்ள நிலையில், ஆளுங்கட்சித் தரப்பிலிருந்து வரும் விளக்கங்களையும் மக்கள் கவனித்து வருகின்றனர்.