விமானத்தின் நடுவானில் ஆடையைக் களைந்து லீலைகள்! அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் அரங்கேறிய அதிர்ச்சி!

அமெரிக்காவின் பால்டிமோரிலிருந்து மியாமி நோக்கிப் பயணித்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ் (American Airlines) நிறுவனத்தின் ஏஏ1779 (AA1779) என்ற ஏர்பஸ் ஏ319 (Airbus A319) ரக விமானத்தில், நடுவானில் பெண் பயணி ஒருவர் நிகழ்த்திய அதிர்ச்சி செயல் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் இரண்டு மணி நேரம் தாமதமாகப் புறப்பட்ட இந்த விமானத்தில் சுமார் 160 பயணிகள் பயணித்துக் கொண்டிருந்தனர்.

விமானம் வானில் பறந்து கொண்டிருந்தபோது, முன்பகுதி இருக்கை எண் 9D-இல் (Seat 9D) அமர்ந்திருந்த பெண் பயணி ஒருவர் திடீரெனத் தனது அனைத்து உடைகளையும் முழுமையாகக் களைந்துவிட்டு, சக பயணிகள் பார்க்கும் வண்ணம் ஆபாசச் செயல்களில் ஈடுபடத் தொடங்கினார். இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் அலறியடித்த நிலையில், தலைமை விமானப் பணிப்பெண் (FA1) உடனடியாகக் காக்பிட்டில் உள்ள விமானிகளுக்குத் தகவல் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, ஏசிஏஆர்எஸ் (ACARS) எனப்படும் விமானத் தொடர்பு அமைப்பு மூலமாக அமெரிக்கன் ஏர்லைன்ஸ் மையத்திற்கு (IOC) அவசரச் செய்தி அனுப்பப்பட்டது. அந்தச் செய்தியில் “இருக்கை 9D-இல் உள்ள பெண் தனது ஆடைகளை முழுமையாக அவிழ்த்துவிட்டு ஆபாசமாக நடந்துகொள்கிறார்; எனவே தரையிறங்கியதும் காவல்துறையினரை வரவழைக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  157 பேர் பலியான கொடூர போயிங் விபத்து: 5 ஆண்டுகள் கழித்து வெளியான அதிரடி தீர்ப்பு... ரூ.276 கோடி இழப்பீடு!

விமானப் பணிப்பெண்கள் அந்தப் பெண்ணைக் கட்டுப்படுத்திய நிலையில், விமானத்தைச் வேறு விமானநிலையத்திற்குத் திருப்பாமல் திட்டமிட்டபடி மியாமிக்கே செலுத்த முடிவெடுக்கப்பட்டது. இரவு 11:23 மணியளவில் மியாமி சர்வதேச விமானநிலையத்தின் கேட் டி2 (Gate D2) பகுதிக்கு விமானம் வந்தடைந்ததும், அங்கு ஏற்கனவே காத்திருந்த மியாமி-டேட் காவல்துறை அதிகாரிகள் விமானத்திற்குள் நுழைந்து அந்தப் பெண்ணைக் கைது செய்தனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.