₹4.5 லட்சத்திற்கு ஐபோனா? போனுக்குப் பதிலா காரே வாங்கலாம்… ஆப்பிளின் அல்டிமேட் விலை கலாய்!

“ஐபோன் வாங்கணும்னா ஒரே ஒரு கிட்னியை வித்தா போதும்ப்பா…” அப்படின்னு நம்ம ஆளுங்க அசால்ட்டா காமெடி பண்ணிட்டு இருந்த காலம் எல்லாம் இத்தோட முடிவுக்கு வந்துடுச்சு! ஆப்பிள் நிறுவனம் சர்வதேச சந்தையில தன்னோட முதல் மடிக்கக்கூடிய போனான ‘iPhone Duo’வை அறிமுகப்படுத்தியிருக்கு. அதோட இந்திய விலையைப் பார்த்த சாதாரண நடுத்தர வர்க்கத்து மனுஷனுக்கு ரத்த அழுத்தமே ஏறாத குறைதான்!

காரணம், இந்த போனோட ஆரம்ப விலையே வெறும் ₹2,99,900 தானாம்! (அட ஆமாங்க, மூணு லட்ச ரூபாய்க்கு வெறும் நூறே நூறு ரூபாய் தான் கம்மி!) சரி, அதுதான் ஆரம்ப விலையாச்சே, டாப் மாடலான 2TB வேரியண்ட் என்ன விலை இருக்கும்னு எட்டிப் பார்த்தா… அது ₹4,49,900-க்கு விக்கித்து நிற்கிறது! இந்த காசைக் கொண்டு போய் ஷோரூம்ல கொடுத்தா, எந்த யோசனையுமில்லாம ஒரு புது காரையே டெலிவரி எடுத்துட்டு கெத்தா வீட்டுக்கு ஓட்டிட்டு வந்திடலாம்!

சரி, அப்படி என்னதான் இருக்கு இந்த போன்ல?

  • மடிக்கக்கூடிய டிஸ்ப்ளே: போனை டக்-னு நடுவுல மடிச்சுக்கலாம். (ஆனா இத வாங்குனா உங்க பர்ஸை ஆயுசுக்கும் திறக்கவே முடியாது!)

  • இரட்டை திரைகள்: ஒரே நேரத்துல ரெண்டு ஸ்கிரீன் பயன்பாடு. (ஒரு ஸ்கிரீன்ல ஜீரோவா இருக்கிற வங்கி கணக்கைப் பார்க்கலாம், இன்னொன்னுல மாதாந்திர EMI கட்டுற தேதியைப் பார்த்து அழலாம்!)

  • அதிவேக A20 புரோ சிப்செட்: உலகத்தையே விரல் நுனியில இயக்கும் வேகம். (ஆனா உங்க வாழ்நாள் சேமிப்பை நொடிப் பொழுதுல காலி பண்ற வேகமும் இதுல உண்டு!)

இதையும் படிக்க தவறாதீர்கள்:  "எனக்கு சாதியும் இல்ல, மதமும் இல்ல!": உயர் நீதிமன்றப்படி ஏறிய நடிகர் பார்த்திபன்... பின்னணி என்ன?

ஆப்பிள் காரன் இந்த போனுக்கு “Duo”ன்னு பேர் வச்சதுக்கே ஒரு மிகப்பெரிய உள்அர்த்தம் இருக்கு போல! இந்த போனை வாங்கணும்னா ஒரு ஜென்மத்து சேமிப்பு பத்தாது, கண்டிப்பா ரெண்டு ஜென்மத்து பாக்கியமும் சேமிப்பும் தேவைப்படும்ன்றதைத்தான் அப்படி மறைமுகமா சொல்றாங்களோ என்னவோ?

“நாங்க போனை மடிச்சு காமிக்கிறோம்”னு சொல்லி, நடுத்தர மக்களின் சொந்த வீடு, கார், நகை கனவுகள் எல்லாத்தையும் சுலபமா மடிச்சு பாக்கெட்ல வச்சுட்டாங்க. நீங்க என்ன நினைக்கிறீங்க… இந்த விலைக்கு போன் வாங்குவீங்களா, இல்ல பேசாம ஒரு செகண்ட் ஹேண்ட் பிளாட்டோ அல்லது காரோ வாங்கிடுவீங்களா?