ஐபோன் பிரியர்களுக்கு கொண்டாட்டம்! மடிக்கக்கூடிய iPhone Duo, 18 Pro அறிமுகம்!

ஸ்மார்ட்போன் உலகத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்த ஆப்பிள் நிறுவனம், தனது புதிய தலைமுறை ஃபிளாக்ஷிப் மாடல்களான ஐபோன் 18 Pro (iPhone 18 Pro) மற்றும் ஐபோன் 18 Pro Max (iPhone 18 Pro Max) ஆகியவற்றைச் சர்வதேச சந்தையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இதனுடன் சேர்த்து, ஆப்பிள் வரலாற்றிலேயே முதன்முறையாக ‘Duo’ என்ற பெயரில் தனது முதல் மடிக்கக்கூடிய (Foldable) ஐபோனையும் அறிமுகம் செய்து தொழில்நுட்ப ரசிகர்களுக்குப் மிகப்பெரிய ஆச்சரியத்தை அளித்துள்ளது.

புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள iPhone 18 Pro மற்றும் 18 Pro Max போன்கள் கருப்பு (Black), சில்வர் (Silver), கிளேசியர் (Glacier) மற்றும் பர்கண்டி (Burgundy) ஆகிய நான்கு ஈர்க்கக்கூடிய ஷேடுகளில் கிடைக்கின்றன. நவீன தொழில்நுட்ப வசதிகள், அதிவேக பிராசஸர் மற்றும் மேம்படுத்தப்பட்ட கேமரா அம்சங்களுடன் இந்த புதிய போன்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்திய சந்தையில் இந்த புதிய மாடல்களின் ஆரம்ப விலைப் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி:

  • iPhone 18 Pro: ஆரம்ப விலை ரூ. 1,64,900

  • iPhone 18 Pro Max: ஆரம்ப விலை ரூ. 1,79,900

  • iPhone Duo (மடிக்கக்கூடிய மாடல்): ஆரம்ப விலை ரூ. 2,99,90

இதையும் படிக்க தவறாதீர்கள்:  ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு ஜாக்பாட்! இனி போனில் ஒரு பைசா செலவில்லாமல் மாற்றலாம்! ₹75 கட்டணம் அதிரடி ரத்து! புதிய சலுகையை அறிவித்த யுஐடிஏஐ (UIDAI)! 6 மாதங்களுக்கு மட்டுமே இந்த அரிய வாய்ப்பு!

இந்தியாவில் இந்த புதிய iPhone 18 Pro தொடர் போன்களுக்கான முன்பதிவு (Pre-order) வரும் செப்டம்பர் 12-ஆம் தேதி முதல் தொடங்குகிறது. முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள் வரும் செப்டம்பர் 18-ஆம் தேதி முதல் நேரடி விற்பனை மூலமாக போன்களைப் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிளின் இந்த அதிரடி அறிமுகம் உலகளவில் உள்ள ஐபோன் பிரியர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.