ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு ஜாக்பாட்! இனி போனில் ஒரு பைசா செலவில்லாமல் மாற்றலாம்! ₹75 கட்டணம் அதிரடி ரத்து! புதிய சலுகையை அறிவித்த யுஐடிஏஐ (UIDAI)! 6 மாதங்களுக்கு மட்டுமே இந்த அரிய வாய்ப்பு!

இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் மிக முக்கியமான அடையாள ஆவணமாக விளங்கும் ஆதார் கார்டில் தங்களின் தனிப்பட்ட விபரங்களைப் பயனர்கள் எளிதாகப் புதுப்பித்துக் கொள்ளும் வகையில் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) தற்பொழுது ஒரு புதிய அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி ஆதார் மொபைல் செயலி (Aadhaar Mobile App) மூலமாகப் பயனர்கள் தங்களது ஈமெயில் முகவரியை (Email Address) எவ்வித கட்டணமும் இன்றி முற்றிலும் இலவசமாகப் புதுப்பித்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நடைமுறைப்படி ஆதார் கார்டில் ஈமெயில் ஐடியை இணைப்பதற்கோ அல்லது மாற்றுவதற்கோ பயனர்கள் 75 ரூபாய் சேவை கட்டணமாகச் செலுத்த வேண்டியுள்ளது. இந்த நிலையில் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் பாதுகாப்புக் குறியீடுகள் நுகர்வோரைச் சரியாகச் சென்றடைவதை உறுதி செய்யவும் இந்த ₹75 கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய யுஐடிஏஐ முடிவு செய்துள்ளது.

இது குறித்து வெளியாகியுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் ஆதார் மொபைல் செயலி மூலம் ஈமெயில் முகவரியைப் புதுப்பிப்பதற்கான சேவைகளுக்கு வசூலிக்கப்படும் ₹75 கட்டணத்தைத் தள்ளுபடி செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்தச் சலுகையானது வரும் 2026 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி முதல் தொடங்கி டிசம்பர் 31 ஆம் தேதி வரை என மொத்தம் ஆறு மாத காலத்திற்குப் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இலவசமாகக் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  குரு தட்சிணை: "படிப்பு நிறுத்தப் பார்த்தப்போ அப்பாவா நின்னார்!" 20 வருஷம் கழித்து ரிட்டயர்டு ஆசிரியருக்குப் புதிய கார் பரிசளித்த ஏழை மாணவர்! மேடையிலேயே கதறி அழுத குருநாதன்! நெகிழவைக்கும் உண்மைச் சம்பவம்!

பொதுமக்கள் தங்களின் தொடர்பு விபரங்களை எப்போதுமே தற்போதைய பயன்பாட்டில் உள்ள விபரங்களுடன் புதுப்பித்து வைத்திருப்பதை ஊக்குவிப்பதே இந்த இலவச சேவையின் முதன்மை நோக்கமாகும். இதன் மூலம் அரசின் முக்கிய அறிவிப்புகள் மற்றும் சரிபார்ப்பு விபரங்கள் எவ்வித தடையுமின்றி பயனர்களுக்குக் கிடைக்கும். எனவே ஆதார் கார்டில் இதுவரை ஈமெயில் முகவரியைப் புதுப்பிக்காதவர்கள் இந்த 6 மாத கால அவகாசத்தைப் பயன்படுத்தி மொபைல் ஆப் மூலமாகவே ஒரு பைசா செலவில்லாமல் தங்களது விபரங்களை உடனடியாக மாற்றிக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.