“திமுக ஆட்சியில் தடங்கல்கள், 10% கமிஷன் கேட்டாங்க!” தொழில் தொடங்க தவெக அரசு காட்டும் அதிரடி தீவிரம் – அமைச்சர் காந்திராஜ் பேச்சு!

தமிழகத்தில் புதிதாகத் தொழில் தொடங்க வரும் முதலீட்டாளர்களையும் தொழிலதிபர்களையும் இரக்கமின்றிப் பிழிந்தெடுத்து, தங்களது சொந்தக் கல்லா கட்டுவதிலேயே குறியாக இருந்த கடந்தகால திமுக அரசின் லஞ்ச லாவண்யத்திற்கு இப்போது ஆலை உரிமையாளர்களே பகிரங்கமாகச் சாட்டையடி கொடுத்துள்ளனர்! தொழில் தொடங்க அனுமதி கேட்கும் கோப்புகளை மாதக்கணக்கில் முடக்கி வைத்து, பார்ட்டி ஃபண்ட் என்ற பெயரில் வெட்கமே இல்லாமல் 10 சதவீதம் வரை கமிஷன் வசூலித்த திமுகவின் கொடூரக் கலாச்சாரத்திற்குத் தமிழக வெற்றிக் கழக ஆட்சி இப்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளது!

சமீபத்தில் நடைபெற்ற தொழிலதிபர்கள் கூட்டத்தில் பேசிய ஆலைத் தலைவர் ஒருவர், கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் நிலவிய கையூட்டு கலாச்சாரத்தை அப்பட்டமாக அம்பலப்படுத்தினார். “கடந்த ஆட்சியில் ஒரு தொழிற்சாலையைத் தொடங்க வேண்டுமென்றால், அரசு அதிகாரிகளுக்கும் ஆளும் கட்சியினருக்கும் 10 சதவீதம் வரை பார்ட்டி ஃபண்ட் என்ற பெயரில் லஞ்சம் கொடுத்தாக வேண்டும். இல்லை என்றால் கோப்புகள் நகராது, தடங்கல்கள் மேல் தடங்கல்கள் வந்து கொண்டிருக்கும். ஆனால், இன்றைய தவெக ஆட்சியில் எவ்வித இடைத்தரகர்களோ, லஞ்ச நெருக்கடிகளோ இல்லாமல் மிக எளிதாகத் தொழில் தொடங்குவதற்கான அனுமதிகள் கிடைக்கின்றன” என்று அவர் நெஞ்சைத் தொட்டு வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்துப் பேசிய தொழில்துறை அமைச்சர் காந்திராஜ், திமுக அரசின் நிர்வாகச் சீர்கேட்டை மிகக் கடுமையாகச் சாடினார். “திமுக ஆட்சியில் புதியதாகத் தொழில் தொடங்க வந்த முதலீட்டாளர்கள் அனைவரும் அதிகார வர்க்கத்தின் மிரட்டலாலும், ஆளுங்கட்சியினரின் கமிஷன் வெறியாலும் அஞ்சி ஓடும் நிலைதான் இருந்தது. தொழில் தொடங்கப் பல தடங்கல்களைச் செயற்கையாக உருவாக்கி, முதலீடுகளை முடக்கியதுதான் திமுகவின் சாதனை! ஆனால், தவெக ஆட்சியில் எந்தவொரு தொழிலதிபரும் யாரிடமும் கையேந்தி நிற்க வேண்டியதில்லை. எவ்விதத் தாமதமும் இன்றி, ஒற்றைச் சாளர முறையில் உடனுக்குடன் தொழில் தொடங்க ஒப்புதல் அளிக்கப்பட்டு வருகிறது” என்று அவர் கெத்தாக முழங்கினார்.

தொழில் செய்ய வரும் மனிதர்களிடம் பிச்சை எடுப்பதைப் போல 10 சதவீதக் கமிஷனைக் கேட்டு மிரட்டிய திமுகவின் மக்கள் விரோதக் போக்கு, மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியைப் பல ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிய பேரவலம்! இத்தகைய லஞ்சக் கூச்சல்களைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமல் ஆட்சி செய்த அந்த அதிகார வர்க்கத்திற்கு, இன்றைய தவெக அரசின் வெளிப்படைத்தன்மையான நிர்வாகம் ஒரு மரண அடியாகவே அமைந்துள்ளது. ஊழலற்ற முறையில் தொழில்துறைக்குச் சிவப்பு கம்பளம் விரித்து, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அள்ளிக் கொடுக்கும் தவெக அரசின் இந்த அதிரடி மாற்றத்தை ஒட்டுமொத்த வர்த்தகச் சமூகமும் மனதாரப் பாராட்டி வருகிறது.