பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் 2026 தேதி அறிவிப்பு! வங்கி சலுகைகளுடன் மாஸ் ஆஃபர்கள்!

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு ஆன்லைன் ஷாப்பிங் பிரியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ‘பிக் பில்லியன் டேஸ் 2026’ (Flipkart Big Billion Days 2026) சிறப்பு விற்பனைக்கான தேதிகளைப் பிளிப்கார்ட் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த ஆண்டின் மெகா விற்பனை வரும் அக்டோபர் 9-ஆம் தேதி முதல் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் தொடங்கவுள்ளது.

பிளிப்கார்ட் பிளஸ் (Flipkart Plus) சந்தாதாரர்களுக்குச் சலுகையாக, ஒரு நாள் முன்னதாகவே, அதாவது அக்டோபர் 8-ஆம் தேதியே இந்த விற்பனைக்கான முன்அனுமதி (Early Access) வழங்கப்படவுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் 23-ஆம் தேதி இந்த விற்பனை தொடங்கிய நிலையில், இந்த முறை சுமார் இரண்டு வாரங்கள் தாமதமாக அக்டோபர் மாதத்தில் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சிறப்பு விற்பனையின் போது வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில், ஐசிஐசிஐ வங்கி (ICICI Bank) மற்றும் ஆக்சிஸ் வங்கி (Axis Bank) கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்திப் பொருட்கள் வாங்குவோருக்கு 10 சதவீதம் வரை உடனடி தள்ளுபடி வழங்கப்படவுள்ளது. மேலும், பிளிப்கார்ட் பிளஸ் உறுப்பினர்களுக்கு வங்கிச் சலுகையின் கீழ் கூடுதல் சலுகையாக 12 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும் என்று பிளிப்கார்ட் தனது அதிகாரப்பூர்வப் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  "தங்கம் வாங்க பிளான் பண்றீங்களா?" - சவரனுக்கு அதிரடியாக உயர்ந்த விலை: இன்றைய நிலவரம் இதோ!

ஸ்மார்ட்போன்கள், மின்னணு சாதனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் ஆடை ரகங்களுக்கு பிரம்மாண்டமான தள்ளுபடிகள் வழங்கப்படவுள்ளன. வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த அனுபவத்தை வழங்கும் வகையில் ‘பிரைஸ் கிராஷ்’ (Price Crash), ‘பிபிடி ஸ்பெஷல்’ (BBD Special), ‘ஸ்டீல் டீல்’ (Steel Deal), ‘பிராண்ட் அவர்ஸ்’ (Brand Hours), ‘டபிள் டிஸ்கவுண்ட்’ (Double Discount) மற்றும் ‘ரஷ் அவர்ஸ்’ (Rush Hours) போன்ற பல்வேறு பிரத்யேக தள்ளுபடி அம்சங்களை பிளிப்கார்ட் தனது மைக்ரோசைட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது. விற்பனைத் தேதி நெருங்கும் போது முழுமையான விலை விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.