காதலன் மீதான அன்பை வெளிப்படுத்துவதற்காகச் செய்யப்பட்ட விசித்திரமான முயற்சி ஒன்று, இறுதியில் போக்குவரத்து காவல் துறையின் அதிரடி அபராதத்தில் முடிந்துள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரைச் சேர்ந்த இளைஞர் ஒருவரின் காரில், அவரது காதலி சுமார் 3,400 உதட்டுச்சாய (Lipstick) முத்த அடையாளங்களைப் பதித்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நகரின் முக்கியச் சாலைகளில் இந்தச் சிவப்பு நிற முத்த அடையாளங்களுடன் அந்தச் சொகுசுக் கார் கடந்த இரண்டு நாட்களாக உலா வந்துள்ளது. இதனைச் சிலர் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட, அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிவேகமாகப் பரவியது. இது பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து காவல்துறையினரின் கவனத்தை ஈர்த்தது.
Love left 3,500 lipstick marks on a boyfriend’s car and a ₹5,500 fine followed! 💋💀
A woman reportedly covered her boyfriend’s car with kiss marks, prompting Madhya Pradesh Police to issue a fine. All the marks were later removed. pic.twitter.com/102W0vC2rL
— Ghar Ke Kalesh (@gharkekalesh) August 25, 2026
இதனைத் தொடர்ந்து, சிட்டி சென்டர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்தச் சொகுசுக் கார் தாட்டிப்பூர் பகுதியைச் சேர்ந்த இளைஞருக்குச் சொந்தமானது என்பது தெரியவந்தது. உடனடியாகக் காரையும் அதன் உரிமையாளரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர், மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் வாகனத்தை முறையற்ற வகையில் மாற்றம் செய்ததற்காகச் (Vehicle Modification) ரூ.5,500 அபராதம் விதித்தனர்.
மேலும், காரில் உள்ள அனைத்து முத்த அடையாளங்களையும் உடனடியாகத் துடைத்து அகற்றுமாறு காவல் ஆய்வாளர் அபிஷேக் ரகுவன்ஷி உத்தரவிட்டுள்ளார். அன்பை வெளிப்படுத்துவதாக எண்ணிச் செய்யப்பட்ட இந்தச் செயல், இணையத்தில் வைரலானதுடன் இளைஞரின் பாக்கெட்டுக்கும் பெரிய துளை போட்டுள்ளது.





