தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மே 7, 2026) மீண்டும் ஏறுமுகத்தில் காணப்படுகிறது. கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களுடன் இருந்த தங்கம் விலை, இன்று கிராமுக்கு ரூ.50 உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
இன்றைய நிலவரம்: 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ஒரு கிராம் ரூ.14,100 ஆக இருந்த நிலையில், இன்று ரூ.14,150-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக, ஒரு சவரன் தங்கம் நேற்று ரூ.1,12,800-லிருந்து ரூ.400 உயர்ந்து, இன்று ரூ.1,13,200 ஆக அதிகரித்துள்ளது. இந்தத் திடீர் விலை உயர்வு நகை வாங்குவோரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளி விலை: தங்கம் விலை அதிகரித்துள்ள போதிலும், வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. நேற்று விற்பனையான அதே விலையிலேயே இன்றும் நீடிக்கிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.275 என்றும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,75,000 என்றும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை உயர்ந்தாலும், வெள்ளி விலை நிலையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.





