தமிழகத்தில் தங்கம் விலை இன்று மீண்டும் அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது ஏழை மற்றும் நடுத்தர மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய நிலவரப்படி, ஜூலை 10ஆம் தேதியான இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து 13,350 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம், ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 240 ரூபாய் அதிரடியாக அதிகரித்து, 1,06,800 ரூபாய் என்ற இமாலய விலையை எட்டியுள்ளது. கடந்த ஜூன் 9ஆம் தேதியுடன் ஒப்பிடுகையில் தங்கம் விலை இந்த அதிரடி உயர்வைச் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதே நேரத்தில், வெள்ளி விலையில் இன்று எவ்வித மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே நீடிக்கிறது. ஒரு கிராம் வெள்ளி 245 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 2,45,000 ரூபாய்க்கும் மாற்றமின்றி விற்பனையாகி வருகிறது. கல்யாண சீசன் மற்றும் சர்வதேச சந்தை மாற்றங்களால் தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருப்பது நகைப்பிரியர்களைக் கவலையடையச் செய்துள்ளது.





