இளநிலை மருத்துவப் படிப்புகளான எம்பிபிஎஸ் (MBBS) மற்றும் பிடிஎஸ் (BDS) உள்ளிட்ட படிப்புகளில் சேருவதற்கான நீட் (NEET-UG) நுழைவுத் தேர்வு வரும் மே மாதம் 3-ம் தேதி நடைபெற உள்ளது. மே 3-ம் தேதி நடைபெற உள்ள நீட் தேர்விற்கான ஹால் டிக்கெட் நாளை (ஏப்ரல் 26) வெளியாகிறது. நாடு முழுவதும் 26 லட்சம் மாணவர்கள் இத்தேர்வை எழுத உள்ளனர்.
நீட் (NEET UG 2026) தேர்வெழுத உள்ள மாணவர்கள் தங்களின் ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்வதற்கான எளிய வழிமுறை இதோ:
மருத்துவப் படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வெழுத விண்ணப்பித்த மாணவர்கள், கீழே கொடுக்கப்பட்டுள்ள படிகளைப் பின்பற்றி தங்களின் ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
படி 1: அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்: தேசியத் தேர்வு முகமையின் (NTA) அதிகாரப்பூர்வ நீட் இணையதளமான exams.nta.ac.in/NEET என்ற முகவரிக்குச் செல்லவும்.
படி 2: ‘Admit Card’ லிங்கைக் கிளிக் செய்யவும்: இணையதளத்தின் முகப்புப் பக்கத்தில் (Home Page) மின்னிக்கொண்டிருக்கும் “NEET (UG) 2026 Admit Card – Download” என்ற லிங்கைக் கண்டறிந்து அதைக் கிளிக் செய்யவும்.
படி 3: லாகின் விபரங்களை உள்ளிடவும்: புதிதாகத் திறக்கப்படும் பக்கத்தில், உங்களது லாகின் விபரங்களைக் கேட்கும். அதில்:
-
உங்களது விண்ணப்ப எண் (Application Number)
-
உங்களது பிறந்த தேதி (Date of Birth)
-
திரையில் தோன்றும் பாதுகாப்பு குறியீட்டை (Security Pin) சரியாக உள்ளிடவும்.
படி 4: சப்மிட் செய்யவும்: விபரங்களை உள்ளிட்ட பிறகு ‘Submit’ பட்டனைக் கிளிக் செய்யவும். இப்போது உங்களது ஹால் டிக்கெட் திரையில் தோன்றும்.
படி 5: விபரங்களைச் சரிபார்க்கவும்: ஹால் டிக்கெட்டில் உள்ள உங்கள் பெயர், புகைப்படம், கையெழுத்து, தேர்வு மையத்தின் முகவரி மற்றும் தேர்வு நேரம் ஆகியவை சரியாக இருக்கிறதா என்பதை ஒருமுறைக்கு இருமுறை சரிபார்க்கவும்.
படி 6: பதிவிறக்கம் மற்றும் பிரிண்ட் அவுட்: அனைத்தும் சரியாக இருந்தால், ‘Download’ பட்டனைத் தட்டி ஹால் டிக்கெட்டைச் சேமிக்கவும். பின்னர், எதிர்காலத் தேவைக்காகவும் தேர்வு அறைக்கு எடுத்துச் செல்லவும் அதன் வண்ணப் பிரதி (Color Printout) ஒன்றைப் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
முக்கிய குறிப்பு: ஹால் டிக்கெட்டில் உள்ள அறிவுறுத்தல்களைத் தவறாமல் படிக்கவும். தேர்வு மையத்திற்கு ஹால் டிக்கெட்டுடன் ஒரு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் ஏதேனும் ஒரு அரசு அங்கீகாரம் பெற்ற அடையாள அட்டையை (ஆதார் கார்டு போன்றவை) எடுத்துச் செல்வது அவசியமாகும்.
மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ NTA இணையதளத்தை பின்பற்றவும்.