“தஞ்சை மக்களுக்கு குட் நியூஸ்!” – ஏப்ரல் 27 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு; பெரிய கோயில் தேரோட்டம் கோலாகலம்!

தஞ்சாவூரின் அடையாளமான உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் (பெருவுடையார் கோயில்), ஆண்டுதோறும் சித்திரை திருவிழா மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான சித்திரை பெருந்திருவிழா தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் ஏப்ரல் 27-ம் தேதி (திங்கட்கிழமை) நடைபெறவுள்ளது.

இந்த முக்கியமான ஆன்மீக நிகழ்வைக் கருத்தில் கொண்டு, தஞ்சை மாவட்ட மக்கள் தேரோட்டத்தைக் கண்டு தரிசனம் செய்ய ஏதுவாக, ஏப்ரல் 27-ம் தேதி அன்று தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தஞ்சை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், அன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடுமுறை தினத்தை ஈடு செய்யும் வகையில், மற்றொரு சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்படும் என்றும் ஆட்சியர் குறிப்பிட்டுள்ளார். தேரோட்டத்தின் போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள் என்பதால், போக்குவரத்து மாற்றம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், தஞ்சை மாவட்ட மக்கள் உற்சாகத்துடன் திருவிழாவிற்குத் தயாராகி வருகின்றனர்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  "DM அங்கிள், நீங்க ரொம்ப நல்லவர்!" சேறும் சகதியுமான சாலையைச் சீரமைக்கக் கோரிய 6 வயது சிறுமி; வீடியோ வைரலானதும் பறந்து வந்த அதிகாரிகள்!

Leave a Comment