கேரளாவில் இன்று முதல் அமலுக்கு வந்த புதிய உத்தரவு! மகளிர் மற்றும் திருநங்கைகளுக்கு இனி டிக்கெட் கட்டணம் கிடையாது… முதல்வர் வி.டி.சதீசனின் மெகா அறிவிப்பு!

தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவைத் தொடர்ந்து, அண்டை மாநிலமான கேரளாவிலும் பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கான கட்டணமில்லா இலவச பேருந்து பயணத் திட்டம் இன்றைய தினம் (ஜூன் 15, 2026) அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. கேரள மாநில அரசுப் போக்குவரத்து கழகமான கேஎஸ்ஆர்டிசி (KSRTC) சாதாரண பேருந்துகளில் இந்த வசதியை வழங்கும் ‘பிரியதர்ஷினி’ (Priyadarshini Scheme) என்ற புதிய வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டத்தை அம்மாநில முதலமைச்சர் வி.டி.சதீசன் இன்று காலை தொடங்கி வைத்தார்.

தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள தம்பானூர் மத்திய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், முதலமைச்சர் சதீசன் குத்துவிளக்கேற்றி இந்தத் திட்டத்தை முறைப்படி தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக, முற்றிலும் பெண் ஓட்டுநர் மற்றும் பெண் நடத்துநரால் இயக்கப்பட்ட அந்த முதல் பேருந்தில், முதலமைச்சர் மற்றும் முக்கிய அதிகாரிகள் செயலக வளாகம் வரை பயணித்தனர். “தமிழ்நாட்டுல எப்பவோ வந்தாச்சு, கேரளாக்காரங்க இப்பதான் ரூட் மாத்துறாங்க போல” என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் தங்களது பாணியில் கமெண்ட் செய்து வருகின்றனர்.

விழாவில் பேசிய முதலமைச்சர் வி.டி.சதீசன், பெண்களுக்கான இந்த இலவச பேருந்து சேவை என்பது அரசு அவர்களுக்குச் செய்யும் ஒரு ‘பிச்சை’ (Charity) அல்ல, மாறாகப் பெண்கள் தங்களது சுயமரியாதையுடனும் பெருமையுடனும் அரசுப் பேருந்துகளில் பயணிக்க வேண்டும் என்பதற்கான ஒரு சமத்துவ உரிமை என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) அரசு, தங்களது தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்த ‘இந்திரா கேரண்டி’ (Indira Guarantee) வாக்குறுதிகளின் முதல் கட்டமாக இந்தத் திட்டம் தற்பொழுது நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  நகைப்பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்! சடாரென சரிந்தது தங்கம் மற்றும் வெள்ளி விலை! இன்றைய (24 ஜூன் 2026) நிலவரம் இதோ!: நேற்று விட இன்னைக்கு ரேட் அவ்ளோ கம்மி! 22 கேரட் தங்கம் மற்றும் வெள்ளி விலை வீழ்ச்சி!

முதற்கட்டமாக மாநிலம் முழுவதும் உள்ள சுமார் 3,125 சாதாரண அரசுப் பேருந்துகளில் இந்த இலவச வசதி அமலுக்கு வந்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் பயணிக்கப் பெண்களுக்கு எவ்வித பிரத்யேக ஸ்மார்ட் கார்டுகளோ அல்லது ஆவணங்களோ தேவையில்லை. பேருந்தில் ஏறும் பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு நடத்துநர்கள் மின்னணு இயந்திரம் (ETM) மூலம் ‘பூஜ்ஜியம்’ (Zero-Fare) மதிப்புடைய ‘பிரியதர்ஷினி’ டிக்கெட்டுகளை வழங்குவர். இந்த திட்டத்திற்காகக் கேரளா அரசுக்கு ஆண்டுக்குச் சுமார் ரூ.800 கோடி கூடுதல் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.