“திமுக மேடையிலேயே கஞ்சா விற்பனை பற்றி பேசுகிறார் பிரேமலதா!” – சேலம் பாமக பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் நக்கல்!

பாட்டாளி மக்கள் கட்சி (PMK) தலைவர் அன்புமணி ராமதாஸ், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டுச் சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், கடந்த ஓராண்டாகவே பாமக-வில் சில குழப்பங்கள் நீடித்து வருவதாகவும், இதனை மக்கள் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருப்பதாகவும் தனது வேதனையைப் பதிவு செய்தார்.

தொடர்ந்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் குறித்துப் பேசிய அன்புமணி, “கேப்டன் விஜயகாந்த் இந்தக் கட்சியைத் தொடங்கியதே திமுக-வை எதிர்ப்பதற்காகத்தான். ஆனால், இன்று பிரேமலதா அதே திமுக கூட்டணியில் போய் அமர்ந்துள்ளார். உண்மையைச் சொல்லப்போனால், பிரேமலதா அந்த அம்மா நம்ம கூட்டணிக்கு (பாமக-பாஜக) தான் வேலை செய்கிறார் என்பதில் சந்தேகமே வேண்டாம். அதனால்தான், முதலமைச்சரை மேடையில் வைத்துக்கொண்டே, தமிழகத்தில் தினமும் சாராயம் விற்கிறார்கள், கஞ்சா விற்கிறார்கள் என தைரியமாகப் பேசுகிறார்,” என நக்கலாகக் குறிப்பிட்டார்.

திமுக கூட்டணியில் இருந்துகொண்டே அக்கூட்டணியின் குறைகளை பிரேமலதா வெளிச்சம் போட்டுக் காட்டுவது, மறைமுகமாகத் தங்களுக்குத் தான் சாதகமாக முடியும் என அன்புமணி சுட்டிக்காட்டினார். சேலம் மண்ணில் பாமக-விற்கு இருக்கும் செல்வாக்கை மீண்டும் நிலைநாட்ட தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் எனவும், மக்கள் மாற்றத்தை விரும்புவதாகவும் அவர் தனது உரையில் வலியுறுத்தினார். தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அன்புமணியின் இந்தப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  பழனியில் பிரகாஷ் ராஜ் அதிரடி பிரச்சாரம்! "இந்தத் தேர்தல் ஜனநாயகத்தைக் காக்க வந்த யுத்தம்" - மார்க்சிஸ்ட் வேட்பாளருக்காக உருக்கமான வேண்டுகோள்!

Leave a Comment