நன்றி மறவாத காளை! சிறுவயதில் உணவளித்தவரை பல ஆண்டுகளுக்குப் பின் அடையாளம் கண்டு மடியில் சாய்ந்த நெகிழ்ச்சி காட்சி – வைரல் வீடியோ!

விலங்குகளுக்குப் பாசம் மட்டும் புரியாது, முக்கியமாக இதுபோன்று முரட்டுதானமான காளை மாடு என்றால் கொஞ்சம் யோசிச்சு பாருங்க? ஆனால், தங்களுக்குச் சிறுவயதில் உணவளித்து ஆதரித்தவர்களை அவை ஒருபோதும் மறப்பதும் இல்லை என்பதற்குச் சான்றாக ஒரு நெகிழ்ச்சியான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரம்மாண்டமான தோற்றம் கொண்ட ஒரு காளை மாடு, தன்னை வளர்த்த மனிதரை பல ஆண்டுகளுக்குப் பிறகும் அடையாளம் கண்டு அவரிடம் காட்டும் அன்பு பலரது கண்களையும் நனைக்கச் செய்துள்ளது.

சமூக வலைதளங்களில் வைரலாகும் அந்த வீடியோவில், ஒரு பெரிய காளை மாடு வேகமாக ஒரு மனிதரை நோக்கி வருகிறது. பார்ப்பதற்கு அவர் மீது பாய வருவது போலத் தோன்றினாலும், மிக அருகில் வந்தவுடன் அந்த மனிதரின் வாசனையையும் முகத்தையும் வைத்து அது அடையாளம் கண்டு கொள்கிறது. அடுத்த நொடியே அதன் ஆக்ரோஷம் மறைந்து, ஒரு சின்னக் குழந்தையைப் போல அந்த மனிதரின் மடியில் தலை வைத்துப் படுத்துக் கொள்கிறது.

இந்த நெகிழ்ச்சியான சந்திப்பு குறித்து… அறியப்படும் தகவலின் படி, அந்த நபர் அந்தக் காளையை அது மிகச்சிறிய கன்றாக இருந்தபோது தாயை இழந்து தவித்த நிலையில் எடுத்து வளர்த்துள்ளார். அதற்குத் தேவையான உணவையும் அன்பையும் வழங்கிப் பராமரித்திருக்கிறார். பல காலத்திற்குப் பிறகு இன்று அந்தக் காளை வளர்ந்து பெரிதான பின்பும், தன் எஜமானின் அன்பை மறக்காமல் அவரிடம் வந்து தஞ்சம் புகுந்துள்ளது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  கேரளா தேர்தல்: இளைஞர்களை கவர கலெக்டர், சிஇஓ போட்ட மரண மாஸ் டான்ஸ்! வைரலாகும் வீடியோ!

இணையவாசிகளின் கருத்துக்கள் படி… இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், “விலங்குகளுக்கு இருக்கும் நன்றி உணர்வு கூட சில மனிதர்களுக்கு இருப்பதில்லை” என்று கமெண்ட் செய்து வருகின்றனர். விலங்குகள் எப்போதுமே தங்களுக்குக் காட்டப்படும் அன்பைத் திருப்பித் தரத் தவறுவதில்லை என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு மிகச்சிறந்த உதாரணமாகும்.

விலங்குகளிடம் நாம் காட்டும் சிறு அன்பு கூட அவற்றின் மனதில் ஆழமாகப் பதிந்துவிடும் என்பதை இந்த வீடியோ மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. மிரட்டும் உருவம் கொண்ட அந்தக் காளை, அந்த மனிதரிடம் காட்டும் அந்தச் சின்னஞ்சிறு குழந்தையின் பாசம், மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையிலான பிரிக்க முடியாத பிணைப்பைப் பறைசாற்றுகிறது. இந்த வீடியோ தற்போது லட்சக்கணக்கான பார்வைகளைக் கடந்து இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

Leave a Comment