10-ஆம் வகுப்பு தேர்ச்சிக்கு இனி இது கட்டாயம்! சிபிஎஸ்இ-யின் அதிரடி அறிவிப்பு!

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) பள்ளி மாணவர்களுக்கான புதிய மொழிப் பாடக் கொள்கையில் மிக முக்கியமான அதிரடி மாற்றத்தை அறிவித்துள்ளது. புதிய தேசிய கல்விக் கொள்கையின் (NEP 2020) வழிகாட்டுதலின்படி, 2027-28ஆம் கல்வி ஆண்டு முதல் 9 மற்றும் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாம் மொழி (R3 – Third Language) கற்றல் மற்றும் அதற்கான தேர்வு முற்றிலும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இப்புதிய உத்தரவின்படி, மாணவர்கள் 10-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வை எழுதினாலும், பள்ளி அளவில் நடத்தப்படும் இந்த 3-வது மொழித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அவர்களுக்குப் பத்தாம் வகுப்புத் தேர்ச்சிச் சான்றிதழ் (Secondary School Examination Pass Certificate) வழங்கப்படும்.

இந்தத் தேர்வு நேரடியாகப் பொதுத்தேர்வில் இடம்பெறாது என்ற போதிலும், இதில் தேர்ச்சி பெறுவது என்பது தேர்ச்சிச் சான்றிதழைப் பெற மிக அவசியமான நிபந்தனையாக மாற்றப்பட்டுள்ளது. ஒருவேளை மாணவர்கள் இதில் தோல்வியுற்றால், பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாவதற்குள் பள்ளி நிர்வாகம் அவர்களுக்கு மறுதேர்வு நடத்தித் தேர்ச்சி பெற வைக்க வேண்டும் என சிபிஎஸ்இ சுற்றறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  சென்னை பள்ளி மாணவர்களுக்கு இனி மேல் ஜாலிதான்! இன்று முதல் அதிரடி சிறப்பு பேருந்துகள் இயக்கம்!